பக்கம் எண் :

சீறாப்புராணம்

1335


இரண்டாம் பாகம்
 

3644. சாற்றிய தனைத்தையுங் கறுபு தன்மகன்

     றேற்றமுற் றுணர்ந்துசிந் தித்து நன்கென

     மாற்றவ ரறிகிலா தெழுந்து வல்லிரு

     ளாற்றிடை குறுகிப்பா சறையி னாயினான்.

37

      (இ-ள்) அந்த மசுக்கமென்பவன் அவ்வாறு கூறிய எல்லாவற்றையும் ஹறுபென்பவனது புத்திரனான அந்த அபாசுபியா னென்பவன் தெரிந்து ஆலோசித்துத் தெளிதலுற்று நல்லதென்று சத்துராதிகள் தெரியாம லெழும்பிக் கொடிய அந்த காரத்தையுடைய பாதையின்கண் சென்று தனது பாசறையில் வந்து சேர்ந்தான்.

 

3645. உதித்ததன் கிளையினுக் குரிய ரியாவரு

     மதித்திடுந் திறத்தினர் மன்னர் நால்வரைக்

     கதித்தபுன் மனத்தினன் கறுபு தன்மக

     னிதத்தொடு மழைத்தரு கிருத்திச் சொல்லுவான்.

38

      (இ-ள்) அவ்வாறு வந்து சேர்ந்த சிறுமையானது சிறக்கப் பெற்ற சித்தத்தை யுடையவனான ஹறுபென்பவனது புதல்வனாகிய அந்த அபாசுபியா னென்பவன் தோன்றிய நன்மையையுடைய தனது குலத்திற்குச் சுதந்திரரான அனைவரும் மதிக்கா நிற்கும் வல்லமையை யுடையவர்களான நான்கு அரசர்களை இனிமையோடுங் கூப்பிட்டுப் பக்கத்திலிருக்கும்படி செய்து சொல்லுவான்.

 

3646. முகம்மது னுறைமதி னாவிற் சூழ்தருந்

     திகைதிகைச் சிறுகுடி நிரைகள் சேர்த்தவண்

     டுகள்படப் பலபொருள் சூறை யாடிநின்

     றிகலவ ருயிர்செகுத் திடுமி னென்றனன்.

39

      (இ-ள்) நீங்கள் அந்த முகம்மதென்பவனது இருப்பிடமாகிய திருமதீனமா நகரத்தைச் சூழ்ந்த திசைகளெல்லாவற்றிலு முள்ள சிறிய குடிகளது பசுக்கூட்டங்களைச் சேர்த்து அந்தத் தானமானது தூளாகும்படி பலபொருள்களையுங் கொள்ளை செய்து அங்கு நின்று சத்துராதிகளது ஆவியைப் போக்கடியுங்களென்று சொன்னான்.

 

3647. மன்னன பாசுபி யான்சொல் வாசகஞ்

     சென்னியிற் கொடுசில பெயர்க டம்முடன்

     மின்னயில் வேலோடும் வீர வாளொடும்

     பன்னருங் கங்குலிற் பரந்து போயினார்.

40

      (இ-ள்) அரசனான அந்த அபாசுபியா னென்பவன் அவ்வாறு சொல்லிய வார்த்தைகளை அந்நான்கு பேர்களுந் தலையிற்