பக்கம் எண் :

சீறாப்புராணம்

1337


இரண்டாம் பாகம்
 

3651. குரகதத் தொடுஞ்சில படையுங் கூட்டியோர்

     வரையிடை சவீக்கெனுந் தலத்தில் வந்திருந்

     திருமன கறுபுத னிளவ லிவ்வணம்

     விரைவினிற் பகைபல விளைக்கின் றானென்றார்.

44

      (இ-ள்) சந்தேகத்தைக் கொண்ட மனத்தையுடைய ஹறுபென்பவனது புதல்வனாகிய அபாசுபியா னென்பவன் குதிரைகளுடன் சில சைனியங்களையுந் திரட்டிக் கொண்டு ஒரு மலையினிடத்துள்ள சவீக்கென்று சொல்லுந் தானத்தில் வந்து தங்கி வேகத்தில் இத்தன்மையான பல விரோதங்களைச் செய்கின்றானென்று சொன்னார்கள்.

 

3652. பற்றல ரெனுமொழி செவியிற் பற்றலும்

     வெற்றிய பாலுபா னாவை வீறொடு

     மற்றையி னகரினுக் காதி யாகவைத்

     துற்றவெஞ் சமர்ப்படை யுடனெ ழுந்தனர்.

45

      (இ-ள்) அவர்கள் அவ்வாறு சத்துராதிகளென்று சொல்லும் வார்த்தையானது காதுகளிற் பொருந்தின மாத்திரத்தில், விஜயத்தையுடைய அபாலுபானா றலியல்லாகு அன்கு அவர்களை அன்றையத் தினமே பெருமையோடும் கோட்டை மதிலையுடைய அந்தத் திருமதீனமா நகரத்திற்கு அரசராக வைத்து விட்டு அங்குத் தங்கிய வெவ்விய யுத்தத்தைச் செய்கின்ற சைனியங்களோடு மெழும்பினார்கள்.

 

3653. குவிபெருஞ் சேனையும் பரியுங் கூட்டமும்

     கவிகையுந் துவசமுங் கலப்பப் பல்லிய

     முவரியி னொலித்திட முகம்ம துஞ்செழும்

     புவிதிசை யதிர்தரக் கடிது போயினார்.

46

      (இ-ள்) அவ்வாறெழும்பிய நமது நாயகம் நபி முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்களும் நெருங்கிய பெரிய சைனியங்களும், குதிரைகளும் மற்றக் கூட்டங்களும் குடைகளும் கொடிகளுங் கலக்கவும், பலவாச்சியங்கள் சமுத்திரத்தைப் போலுஞ் சத்திக்கவும், செழிய இப்பூமியினது எண்டிசைகளும் அதிரவும், விரைவிற் போனார்கள்.

 

3654. பொழின்முகில் வரையிடை பதுறிற் போரினில்

     வழிநிண மறாதவேன் மன்னர் வெம்படைக்

     குழுவொடுங் கறுக்கறா வென்னக் கூறிய

     வெழிறருந் தலத்திடை யிறங்கி னார்களால்.

47

      (இ-ள்) அவ்வாறு போன மேகங்கள் தங்கா நிற்குஞ் சோலைகளையுடைய மலையினிடத்துள்ள பதுறென்னுந்