இரண்டாம் பாகம்
3658. கரந்துபோ யினனர சென்னுங்
கட்டுரை
பரந்தன பாசறை முழுதும் பாய்கதிர்
விரிந்தன விடிந்தன விரைவி
னெங்கணுஞ்
சரிந்தனர் குழுவொடுந் தறுகண்
வீரரே.
51
(இ-ள்) தங்களுக்கெல்லாம்
அரசென்று சொல்லும் அந்த அபாசுபியா னென்பவன் அவ்வாறு அர்த்த ராத்திரியில் ஒளித்துச் சென்றானென்று
கூறும் உறுதி வாக்கியமானது அந்தப்பாசறை முழுதும் பரவிற்று. பாயா நிற்குஞ் சூரிய கிரணங்கள் எவ்விடத்தும்
பரவின. சூரியனு முதயமானான். அஞ்சாமையையுடைய வீரர்களான அந்தக் காபிர்கள் வேகத்தில் தங்களது
கூட்டத்தோடும் எவ்விடத்துஞ் சாய்ந்து சென்றார்கள்.
3659.
சரந்தரு தூணியுந் தனுவுந் தண்டமு
மரந்தட வயிலுந்தா வச்சு வங்களும்
பரந்தவெண் படங்குபா சறையும்
வீதியு
மிருந்தன போயின ரியாரு மென்பவே.
52
(இ-ள்) அவ்வாறு செல்ல,
அம்புகளைத் தருகின்ற தூணிகளும் விற்களும் தண்டங்களும் அரத்தினால் தேய்த்து மினுக்குகின்ற வேல்களும்,
பாய்ந்து செல்லுகின்ற குதிரைகளும், பரவிய வெள்ளிய கூடாரங்களையுடைய பாசறைகளும், அப்பாசறைகளின்
தெருக்களும், அங்கிருந்த அனைவர்களும் போய் விட்டார்களென்று சொல்லும் வண்ணமிருந்தன.
3660.
வானவர் பரவிய வள்ளன் மானபி
யீனமில் கறுக்கறா வெல்லை
நீத்துவந்
தானதோர் சவீக்கினி லரிகள்
காண்கிலார்
கானலர் படங்கும்பா சறையுங்
கண்டனர்.
53
(இ-ள்) தேவர்களான மலாயிக்கத்து
மார்கள் பணிகின்ற வள்ளலாகிய பெருமை பொருந்திய நமது நாயகம் நபிகட் பெருமானார் நபி முகம்மது
முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்கள் குற்றமற்ற அந்தக் கறுக்கறாவென்னுந் தானத்தை
விட்டும் நீங்கி வந்து ஒப்பற்ற அந்தச் சவீக்கென்று சொல்லுந் தலத்தில் சத்துராதிகளாகிய
சிங்கங்களைக் காணாது வாசனை பொருந்திய புஷ்பமாலைகளைத் தூக்கிய கூடாரங்களையும் பாசறைகளையுங்
கண்டார்கள்.
3661.
கருஞ்சகுந் தமுங்கொடிக்
கணமுங் கங்கமு
முரைஞ்சிடக் கொடியொடு நடந்த
வொள்ளியோர்
பெருஞ்சம ரெனுமொரு பெற்றி
காண்கிலா
ரருஞ்சுர வழியிளைப் பாறி
னாரரோ.
54
|