பக்கம் எண் :

சீறாப்புராணம்

1459


இரண்டாம் பாகம்
 

      (இ-ள்) அன்றியும், பெரிய காபிர்களாகிய சிலபேர்கள் தூசை விட்டெறிந்து ஓடினார்கள். சிலபேர்கள் குதிரைகளின் மீது ஏறிக் கொண்டு அக்குதிரைகளைப் பாதைகளிலேவி வெளிப்பட்டுச் சென்றார்கள். சில பேர்கள் இதயமானது அஞ்சப் பெற்றுத் திசைக ளெல்லாவற்றிலு மோடினார்கள். சில பேர்கள் விசாலமான தங்கள் முதுகைக் கூசிக் கூசி நின்று ஓடினார்கள்.

 

4022. மூண்டு வந்தெழுங் காபிர்க ளியாவரு முறிய

     மாண்ட யங்கிய முகம்மது மமைத்திகல் வாய்மை

     தேண்ட தீனவ ரியாரையு மொருப்படத் திரட்டி

     யாண்டி ருக்கின்ற சகுபெனுந் தலத்தினி லானார்.

263

     (இ-ள்) ஒன்று கூடி வந்து எழுந்த அந்தக் காபிர்க ளனைவரும் அவ்வாறு முறிந்து செல்ல, மாட்சிமையானது பிரகாசியா நிற்கும் நமது நாயகம் நபிகட் பெருமானார் நபிமுகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்களும் விரோதத்தை யமையப்பண்ணிச் சத்திய வசனத்தைத் தேடிய தீனுல் இஸ்லா மென்னும் மெய்ம்மார்க்கத்தை யுடைய அசுஹாபிமார்க ளனைவரையும் ஒருமனப்படுவண்ணம் ஒன்று கூட்டி அவ்விடத்திலிருந்த சகுபென்று சொல்லுந் தானத்தின்கண் போய்ச் சேர்ந்தார்கள்.

 

4023. வீய்ந்த தீனவ ரெவரெவ ரெனநபி வினவ

     வாய்ந்த நெஞ்சின ராறுபத் தைந்தெனு மரசர்

     மாய்ந்து போயின ரவர்களிற் றலைமைமன் னவர்கள்

     காய்ந்த சீற்றத்த ரீரெழு பெயரெனக் கரைந்தார்.

264

     (இ-ள்) அவ்வாறு சேர்ந்த நமது நாயகம் நபிகட் பெருமானார் நபிமுகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்கள் ஷகீதான தீனுல் இஸ்லாமென்னும் மெய்ம்மார்க்கத்தை யுடைய அசுஹாபிமார்கள் யார்? யாரென்று கேட்க, சிறந்த இருதயத்தை யுடையவர்களென்று சொல்லும் அறுபத்தைந்து அரசர்கள் ஷகீதாகிப் போனார்கள். அந்த அரசர்களில் தலைமைத் தனத்தைப் பெற்றவர்களான உலர்ந்த கோபத்தை யுடையவர்கள் பதினான்கு பெயர்களென்று சொன்னார்கள்.

 

4024. இந்த மன்னவர் தம்மையங் கறிந்தறிந் தெடுத்து

     விந்தை யாம்படி யடக்குதற் கெழுந்தனர் விரைவின்

     வந்து செங்கள நோக்கினர் நோக்கலு மருண்டார்

     சிந்தி வீழ்ந்தன ருருத்தெரி யாதெனத் தியங்கி.

265

      (இ-ள்) அவ்விதஞ் சொல்ல, இந்த அரசர்களை அந்த யுத்தக் களத்தில் தெரிந்து தெரிந்து எடுத்து ஆச்சரியமாகும் வண்ணம்