இரண்டாம் பாகம்
அடக்கம் பண்ணுவதற்கு அவர்கள்
எழும்பி வேகத்தில் அந்த யுத்தக்களத்தில் வந்து பார்த்தார்கள். அவ்வாறு பார்த்த மாத்திரத்தில்
சிதறிப் பூமியில் விழுந்து ஷகீதான அவர்களது உடலானது தெரியாதென்று சொல்லிச் சோர்ந்து மயக்கமடைந்தார்கள்.
4025.
ஈறி லாதவன் றிருநபி யின்னண மிருந்த
வாறு கண்டொரு தீனவர் தமைவர வழைத்துத்
தேறி யிக்கள நடுநின்று வாங்கினைத் திருந்தக்
கூறு மென்றன ரென்றலும் வாங்கினைக் குறித்தார்.
266
(இ-ள்) இத்தன்மையாக
இருந்த வரலாற்றை முடிவற்றவனான அல்லாகு சுபுகானகு வத்த ஆலாவின் தெய்வீகந் தங்கிய நமது நாயகம்
நபிகட் பெருமானார் நபிமுகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்கள் பார்த்துத்
தீனுல் இஸ்லாமென்னும் மெய்ம்மார்க்கத்தை யுடைய ஒரு அசுஹாபியைக் கூப்பிட்டு நீவிர் இந்த யுத்தக்
களத்தினது மத்தியல் நின்றுகொண்டு வாங்கைத் தெளிந்து செவ்வையாகச் சொல்லுமென்று
சொன்னார்கள். அவர்கள் அவ்விதஞ் சொன்ன மாத்திரத்தில் அவரும் வாங்கைக் குறித்துச்
சொன்னார்.
4026.
உற்ற வாங்கிதங் கேட்டலு மொருதலை யெடுத்துச்
சுற்று நோக்கின கண்டமு சாவெனத் துணிந்து
கொற்ற மேற்கொண்ட தீனரு முகம்மதுங் குறித்து
வெற்றி யாம்படி யெடுத்தடக் கினர்மண்ணில் விரைவின்
267
(இ-ள்) அவ்வாறு
சொல்ல, சரியான அந்த வாங்கினது வார்த்தைகளைக் கேட்டன மாத்திரத்தில் ஒரு தலையானது தன்னைத்
தூக்கிக் கொண்டு சுற்றிலும் பார்த்தது. அஃதை வெற்றியை மேலாகப் பெற்ற தீனுல் இஸ்லாமென்னும்
மெய்ம் மார்க்கத்தை யுடைய அசுஹாபிமார்களும் நமது நாயகம் நபி முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு
அலைகி வசல்ல மவர்களும் பார்த்து ஹம்சா றலி யல்லாகு அன்கு அவர்க ளென்று குறிப்பிட்டுத் தெளிந்து
எடுத்து வெற்றியாகும் வண்ணம் வேகத்திற் பூமியின் கண் அடக்கஞ் செய்தார்கள்.
4027.
அரச ரன்றிமற் றெவரையு முகம்மதாண் டாங்காங்
கிருவர் தம்மையோர் குழிதொறு மடக்கிவித் தியல்பின்
முரச மார்த்தெழ வெற்றிவெண் கொடிசெல முன்னி
வரைக டந்துபல் வளமதி னாவினில் வந்தார்.
268
(இ-ள்) நமது நாயகம்,
எம்மறைக்குந் தாயகம், நபிகட் பெருமானார் நபி செய்யிதுனா செய்யிதுல் முறுசலீன் ஹபீபுறப்பில்
|