இரண்டாம் பாகம்
ஆலமீன் காத்திமுல் அன்பியா
முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்கள் தலைமைத் தனத்தை யுடைய அம்மன்னவரை
யல்லாமல் மற்ற எல்லா அசுஹாபிமார்களையும் அந்த யுத்தக்களத்தில் அங்கங்கு இரண்டு பேர்களை
ஒற்றைக் குழிதோறும் இயல்புடன் அடக்குவித்து முரசங்க ளொலித்து ஓங்கவும், விஜயத்தைக் கொண்ட
வெண்ணிறத்தையுடைய துவஜங்கள் செல்லவும், மலைகளை நெருங்கித் தாண்டிப் பலவளங்களை யுடைய திருமதீனமா
நகரத்தின்கண் வந்து சேர்ந்தார்கள்.
|