New Page 8
இரண்டாம் பாகம்
(இ-ள்) ஆதலால் நமது
வல்லமை தானென்னை? முயற்சி யென்னை? செல்வமென்னை? அபிமான மென்னை? வீரமென்னை? சேனையென்னை?
அரசர்களது வெற்றியைக் கொண்ட வாளாயுதத்தினது வலிமையென்னை? புண்ணிய மென்னை? தெய்வ மென்னை?
அந்தோ! இவைக ளியாவும் பயனற்றனவே யென்று சொல்லி மாண்டவர்களைப் போல இந்திரிய உணர்ச்சிக
ளடங்கப் பெற்று இதயத்தினிடத்து இத்தன்மையான சமாச்சாரங்களைக் கூறினான்.
4033.
தனியே கிடந்து பெருமூச்சிற்
றளர்ந்து பலகா லெண்ணிமிகத்
துனியே பெருக வுறைந்திடுதல்
சூழச் சமன்று சேனையொடுங்
குனியார் சிலைக்கை வேந்தரொடுஞ்
சென்று கோளார் குறும்படக்கி
முனையோ டின்னும் வரவேண்டு
மென்ன வெழுந்தான் முனையில்லான்.
6
(இ-ள்) துணிவற்றவனான
அந்த அபாசுபியானென்பவன் அவ்வாறு ஏகமாய்க் கிடந்து கொண்டு பெருமூச்சுடன் வாடி அனேக தடவை ஆலோசித்து
அதிகமாய்த் துன்பமே ஓங்கும் வண்ணம் இங்குத் தங்கியிருப்பது நுண்ணறிவல்ல, நாம் நமது சைனியங்க
ளோடும் வளைத்தலைப் பொருந்திய கோதண்டத்தைத் தாங்கிய கையை யுடைய அரசர்களோடும் அங்குப்
போய்ச் சத்துராதிகளான அவர்களது பொல்லாங்கை யொடுங்கச் செய்து முதன்மையுடன் இன்னும் வருதல்
வேண்டு மென்று எழும்பினான்.
4034.
வேலை யென்னுஞ் சேனைவெள்ளம்
விபுலைப் பரப்பின் மேற்பரப்பக்
கால முகிலா ரிடியென்னக்
கணிப்பி னெறுழ்வாச் சியங்கதறப்
பாலை நிலமுங் கானிலமுங்
கடந்து திறல பாசுபியான்
சாலைப் பொழில்சூ ழிறவுகா
வென்னுந் தலத்தின் வந்தனனால்.
7
(இ-ள்) அவ்வா றெழும்பிய
வலிமையை யுடைய அந்த அபாசுபியா னென்பவன் சமுத்திர மென்று சொல்லுந் தனது சைனியமாகிய பிரவாக
மானது பூமியினது பரப்பின் மீது பரக்கவும், மழைக் காலத்தி லுண்டாகும் மேகத்திற் பொருந்திய
இடியைப் போலும் மதிப்பினை யுடைய வலிமையைக் கொண்ட
|