இரண்டாம் பாகம்
(இ-ள்) அவ்வாறு செல்ல,
குதிரைக ளிருக்கவும், வல்லமையிருக்கவும், கிட்டாத கீர்த்தி யிருக்கவும், சமுத்திரத்தை நிகர்த்த
சைனியங்களோடும் அரசனான அந்த அபாசுபியானென்பவன் வாய்ப்பேச்சினாற் பயந்து மனமானது கலங்கப்
பெற்று ஓடினானென்று தெரிவிக்க, அதை நாயகம் நபிகட் பெருமானார் நபிமுகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு
அலைகிவசல்ல மென்று சொல்லும் வள்ளலவர்கள் கேள்வியுற்று அந்தக் காபிர்களது பெரிய பாசறையின்கண்
சென்று அங்கிருந்த பொருள்க ளெல்லாவற்றையும் வாரினார்கள்.
4046.
தேறா வறியோர் தனம்படைத்த
செல்வ ரென்ன மகிழ்வெய்த
வீறார் நிதியம் பகுந்தளித்து
வேட்டு நாண்மூன் றிருந்தென்று
மாறாப் புண்ணீர் குடித்தெரியு
மடலூர் வேற்கை யகுமதுத
மாறா வோசை யியங்குமுற
மதீனா நோக்கி யெழுந்தனரால்.
19
(இ-ள்) எக்காலமும்
ஓயாத இரத்தத்தை யருந்திப் பிரகாசிக்கா நிற்கும் வலிமை மிகுத்த வேலாயுதத்தைத் தாங்கிய கையையுடைய
அஹ்மதென்னுந் திரு நாமத்தைக் கொண்ட நமது நாயகம் நபிகட் பெருமானார் நபிமுகம்மது முஸ்தபா
றசூல் சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்கள் தேறாத தாரித்திரர்கள் சம்பத்தையுண்டாக்கிய செல்வரைப்
போலுஞ் சந்தோஷத்தைக் கொள்ளப் பெருமை பொருந்திய அந்தத் திரவியங்களைப் பங்கிட்டு
யாவருக்குங் கொடுத்து மூன்று நாள் வரை மிகவும் விரும்பி அவ்விடத்தி லுறைந்து நீங்காத கீர்த்தியானது
தங்கிய தங்களது திருமதீன மாநகரத்தை விரும்பி யெழும்பினார்கள்.
4047.
வெள்ளைக் கவரித் திரளிரட்ட
மேகக் கவிகை விசும்போங்கத்
துள்ளிக் கவனப் பரிநடப்பத்
திரண்டு தொகையி லாததிறன்
மள்ளர் செறிய வரும்வேளை
முன்னர் வலிதின் விதிபிடித்துத்
தள்ள அபாஅ சாவென்போன்
வந்தான் கொடிய தறுகண்ணான்.
20
(இ-ள்) அவ்வாறு எழும்பி
வெண்ணிறத்தை யுடைய கூட்டமாகிய சாமரங்களை வீசவும், மேகக் குடையானது ஆகாயத்தின்கண் ஓங்கவும்,
வேகத்தைக் கொண்ட குதிரைகள்
|