இரண்டாம் பாகம்
4062.
ஆங்கது கண்டுகஃ பென்னு மாண்டகை
வீங்கின னுயிர்ப்பினால் வெய்து யிர்த்தனன்
றாங்கினன் மனத்தினில் வெருவல் சஞ்சலத்
தேங்கின னென்செய்வோ மென்ன வெண்ணியே.
11
(இ-ள்) ககுபென்று
சொல்லும் ஆண் தன்மையை யுடையவனான அந்த அரசன் அவ்விடத்தில் அதைப் பார்த்து உயிர்ப்பினால்
வீங்கினான். பெருமூச்சு விட்டான். இதயத்தின்கண் பயத்தை பூண்டான். இனி யாது செய்வோம்? செய்யுமுபாய
மொன்று மில்லையே யென்று கருதிக் கவலையினால் ஏங்கினான்.
4063.
மல்லணி புயத்தினர் சூழ வஞ்சக
னெல்லையில் விளங்கிய பதண மேறினன்
செல்லெனுங் குடைநிழ றிகழு மாநபி
யொல்லையி னிருந்தன ருற்று நோக்கினான்.
12
(இ-ள்) அவ்வாறு ஏங்கிய
வஞ்சகத்தை யுடையவனான அந்தக் ககுபென்னும் அரசன் வலிமையைத் தரித்த தோள்களையுடைய வீரர்கள்
தன்னைச் சூழும் வண்ணம் அளவின்றி விளங்கிய மதிலினுள் ளிருந்த மேடையின் மீது விரைவில் ஏறி
மேக மென்று சொல்லுங் குடை நிழலினிடத்துப் பிரகாசியா நிற்கும் பெருமை பொருந்திய நமது நாயகம்
நபிகட் பெருமானார் நபிமுகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்க ளிருப்பதை ஊன்றிப்
பார்த்தான்.
4064.
கொடிநெடு மூதெயில் கொம்மை யேற்றிய
விடியெனுங் கல்லினை யேந்தி யாவரும்
புடையினின் றிடுநபி பொன்றிப் போதரப்
பிடரியிற் றள்ளுவ மென்னப் பேசினான்.
13
(இ-ள்) அவ்வாறு பார்த்துக்
கொடிகளையுடைய பழமையான நீண்ட அந்தக் கோட்டையினது கொத்தளத்தி லேற்றிய இடியென்று கூறுங் கல்லை
நாமனைவருந் தாங்கி நமது பக்கத்தில் நிற்கின்ற நபியாகிய இந்த முகம்ம தென்பவன் மாண்டு
போகும் வண்ணம் அவனது பிடரியில் தள்ளுவோ மென்று சொன்னான்.
4065.
மறையினிற் பேசிய வாய்மை விண்ணிடத்
துறைதரு சபுறயீல் விரைவி னோர்ந்துபோய்
முறையொடுஞ் சொல்லினர் முடிவி லாததீ
னிறையறிந் தப்புறத் தேகி நின்றனர்.
14
(இ-ள்) அவன் அவ்வாறு
இரகசியமாகச் சொல்லிய வார்த்தையை வான லோகத்தின்கண் தங்கா நிற்கும்
|