இரண்டாம் பாகம்
4077.
புன்மைவே லேந்திக் கொலையெனுங் கவசப்
போர்வைமேற் போட்டுவெங் கபட
வன்மையாம் நெடிய காளகம் விசித்து
வஞ்சவெம் முடியினைத் தாங்கித்
தொன்மதப் பரிசை யோர்புறத் தணிந்து
துணிவெனுங் கழலடி சேர்த்துத்
தின்மையாம் படைக ளெங்கினு நடப்ப
வெழுந்தனன் பாவமாய்த் திரண்டான்.
26
(இ-ள்) அன்றியும்,
பாவமாய்த் திரண்டவனான அந்தக் ககுபென்பவன் சிறுமையாகிய வேலாயுதத்தைக் கையில் தாங்கிக்
கொலையென்று சொல்லுஞ் சட்டையாகிய போர்வையைச் சரீரத்தின் மீது போட்டுக் கொடிய கபடத்தைக்
கொண்ட வன்மையாகிய நீண்ட காளகத்தை அரையிற் கட்டி வஞ்சகமாகிய வெவ்விய கிரீடத்தைத்
தலையிற் பூண்டு பழைய மதமாகிய கேடயத்தை ஒரு பக்கத்தில் தரித்துத் துணிவென்று சொல்லும் வீரக்கழலைப்
பாதங்களிற் பொருத்தி எவ்விடத்துந் தீமையாகிய சைனியங்கள் நடக்கும் வண்ண மெழும்பினான்.
4078.
மறத்தினிற் சிறந்தங் கறத்தினைக் கடந்த
மள்ளர்நாற் பதுபெய ரினிதின்
புறத்திடை சூழக் ககுபெனுஞ் சூதன்
புரவியி னேறியங் கெளிதிற்
சிறுத்தகட் பெரிய சுழல்செவித் தூங்க
றிரிவனம் பலபல கடந்து
நறைத்தடஞ் சூழக் கவின்பெறு மக்க
நன்னக ரடைந்தன னன்றே.
27
(இ-ள்) அவ்வாறெழும்பிய
ககுபென்று சொல்லும் பெயரையுடைய சூதன் அவ்விடத்தில் கன்மத்தின் மேலாகித் தன்மத்தை விலக்கிய
வீரர்களான நாற்பது பெயர்கள் இனிமையோடுந் தனது வலம், இடம், புறமென்னும் முப்பக்கத்திலுஞ்
சூழும் வண்ணங் குதிரையின் மீது ஏறிச் சிறிய விழிகளையும் பெரிய சுழல்வைக் கொண்ட காதுகளையு
முடைய யானைகள் சஞ்சரிக்கின்ற அங்குள்ள பற்பல வனங்களையும் இலகுவில் தாண்டிப் புஷ்பங்களின்
மதுவைப் பொருந்திய வாவிகள் வளையும்படி அழகைப் பெற்ற நன்மையை யுடைய திருமக்கமா நகரத்திற்
போய்ச் சேர்ந்தான்.
4079.
இக்கிரி மாவை காலிதென் பவனை
யிசையுடை கறுபருள் சேயை
யொக்கலிற் சிறந்த தலைமைய ரவரை
யுவப்பொடு மழைத்தினி திருத்தி
|