இரண்டாம் பாகம்
மிக்கநந் நயினார் வந்ததுந் தன்மேல்
வெகுண்டதும் போயதும் வெருவித்
தக்கநன் னினைவிற் றானுமங் குற்ற
தன்மையு மெடுத்தெடுத் துரைத்தான்.
28
(இ-ள்) அவ்வாறு
போய்ச் சேர்ந்து இக்கிரிமா வென்பவனையும், காலிதென்பவனையும், கீர்த்தியை யுடைய ஹறுபென்பவன்
இவ்வுலகத்தின்கண் தந்த புத்திரனாகிய அபாசுபியா னென்பவனையும், தன துறவினான் மேன்மைப்பட்ட
தலைமைத் தனத்தை யுடையவர்களான அவர்களையும் பிரியத்தோடுங் கூப்பிட்டு இனிமையுடனிருக்கும்படி செய்து
மேலான நமது ஆண்டவர்களாகிய நாயகம் நபிகட் பெருமானார் நபிமுகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு
அலைகி வசல்ல மவர்கள் தன் நகரத்திற்கு வந்ததையும், தன்மேற் கோபித்ததையும், திரும்பிச் சென்றதையும்,
அதனாற் பயந்து தானும் தகுதியான நல்ல ஆலோசனையோடு அங்கு வந்த தன்மையையும் மிகவும் எடுத்துச்
சொன்னான்.
4080.
சொல்லியாங் கவர்க்கு வாய்மையும் பேசித்
துணிவுட னெழுந்தணி மதீனத்
தெல்லையில் வேந்தர் சூதர்க ளியாரு
மிருந்தன ரவரொடு மினிய
பல்லுரை யாவும் பேசவும் வேண்டு
மெனநினைந் தரத்தொடு பழகுங்
கொல்லுலை வேற்கை மள்ளர்கள் சூழ
நடந்தனன் குவவுத்தோள் வீரன்.
29
(இ-ள்) திரட்சியைக்
கொண்ட புயங்களையுடைய வீரனான அந்தக் ககுபென்பவன் அவ்வாறு சொல்லி அவ்விடத்தில் அவர்களுக்குச்
சத்தியமுங் கூறித் தைரியத்தோடு மெழும்பி அழகிய திருமதீனமா நகரத்தினது பக்கத்தில் அரசர்களான
ஜூதஜாதியார்க ளனைவரு மிருக்கின்றார்கள். அவர்க ளோடும் இனிமையை யுடைய பல வார்த்தைகளாகிய
யாவற்றையும் பேசவும் வேண்டுமென்று கருதி அரத்துடன் பழகிய கொல்லரது உலைமுகத்தி லடித்த வேலாயுதத்தைத்
தாங்கிய கையை யுடைய வீரர்கள் தன்னைச் சூழும் வண்ணம் நடந்தான்.
4081.
தண்ணில வுமிழுந் தரளவெண் மணிக
டயங்கிய தடத்தொடு நிறைந்த
பண்ணைசூழ் சுகுறா வெனுநக ரேகிப்
பாவையர்க் கணிவிளக் கென்ன
|