பக்கம் எண் :

சீறாப்புராணம்

1483


இரண்டாம் பாகம்
 

வெண்ணெய்யார்ந் திருண்ட நெறியறற் கூந்த

     லில்லவ ளுடன்வர வெழுந்து

மண்ணிடந் துதிக்கும் பொன்னுல கென்னு

    மதீனமா நகரில்வந் தனனால்.

30

     (இ-ள்) அவ்வாறு நடந்து குளிர்ச்சி பொருந்திய நிலவைக் கக்கா நிற்கும் முத்தாகிய வெள்ளிய நிறத்தையுடைய இரத்தினங்கள் பிரகாசிக்கின்ற வாவிகளோடும் நிறைந்த வயல்கள் சூழ்ந்த சுகுறாவென்று சொல்லும் தனதூரின்கண் போய்ச் சேர்ந்து பெண்களுக்கு அழகிய தீபத்தைப் போன்ற எண்ணெய்யைப் பொருந்திக் கறுத்த ஒழுங்கைக் கொண்ட கருமணலை நிகர்த்த கூந்தலையுடைய தனது மனைவியானவள் தன்னோடு வரும் வண்ணமெழும்பி இப்பூவுலகம் புகழா நிற்குஞ் சொர்க்க லோகமென்று சொல்லுந் திருமதீனமா நகரத்தின்கண் வந்து சேர்ந்தான்.

 

4082.  வாயினின் முகமன் கூறியுண் மனத்தின்

          வஞ்சக மியற்றிமே லெரியுந்

     தீயினுங் கொடிய தன்மைய ரெவர்க்குஞ்

          செம்மையி லாதவெஞ் சூத

     ரேயிடத் தொருமா மனையிடத் திருந்தா

          ரெனவிடப் பணிவிரிச் சிகமு

     மாயரு நரகம் புகுவதற் கெழுவ

          தல்லது வேற்றிடம் போகான்.

31

     (இ-ள்) நெருப்பை நிகர்த்த விஷத்தைக் கொண்ட பாம்புகளும் விருச்சிகங்களும் ஆய்கின்ற அரிய நரகலோகத்தில் நுழைவதற்கு எழும்புவதன்றிச் சொர்க்கலோகத்திற் செல்லாதவனான அந்தக் ககுபென்பவன் அவ்வாறு போய்ச் சேர்ந்து யாவர்க்கும் வாயினால் உபசார வார்த்தைகளைப் பேசி இதயத்தினிடத்துக் சூத்திரங்களைச் செய்கின்ற மேலாகி வளர்ந்து எரியா நிற்கும் அக்கினியைப் பார்க்கிலும் மிக்க குரூரத்தைப் பொருந்திய தன்மையை யுடையவர்களான செம்மை யில்லாத கொடிய ஜூதஜாதியார்  தங்கிய இடத்திலுள்ள ஒரு பெருமை பொருந்திய வீட்டின்கண் ணிருந்தான்.

 

4083.  கடனெனு நோன்பு நோற்றிடு மவரைக்

          காண்டொறுந் தொடுந்தொறும் விரைவிற்

     றடந்தொறும் போய்ப்போய் மூழ்குவன் றொழுகை

          தகுமவர்க் காணினு நயனங்