பக்கம் எண் :

சீறாப்புராணம்

1485


இரண்டாம் பாகம்
 

லுன்னுவ தென்கொ றவமுடை தீன

     ரிவர்களி லொருவரை யேவிக்

கன்னிய ரிரங்கப் பாதக னாவி

     களைவது கருத்தெனக் குறித்தார்.

34

     (இ-ள்) அந்த ககுபென்பவன் இத்தன்மையான வார்த்தைகளைக் கூறித் தீனுல் இஸ்லாமென்னும் மெய்ம் மார்க்கத்தையுடைய முஸ்லிம்களுக்குத் துன்பங்களை யியற்றி அந்த மதீனமா நகரத்தில் இருந்தான். இப்படி இருப்பதை அரச ராதிபரான நமது நாயகம் நபிகட் பெருமானார் நபிமுகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்கள் கேள்வியுற்று மனமானது கோபிக்கப் பெற்று அந்தக் ககுபென்பவன் தனது சத்தியவார்த்தைக் குடன்பட்டு நடந்திலன். இனிமேல் நாம் ஆலோசிப்பதென்னை? ஒன்றுமில்லை. தவத்தையுடைய தீனுல் இஸ்லாமென்னும் மெய்ம்மார்க்கத்தைக் கொண்ட அசுஹாபிமார்களான இவர்களில் ஒரு அசுஹாபியை ஏவி இளம் பருவத்தையுடைய மாதர்க ளழும் வண்ணம் மிகுத்த பாவியாகிய அவனது பிராணனை இல்லாமற் செய்வதே குறிப்பென்று கருதினார்கள்.

 

4086.  ஆதிநா யகன்ற னேவலின் படியே

          யன்றிமற் றேதொன்று நினையா

     நீதியின் மருவுந் தீனவ ரியாரு

          நிறைதரக் கூவிமுன் னிருத்திச்

     சூதரிற் கொடிய சூதன்றன் செய்கை

          துன்புற யாவையுந் தொகுத்து

     வேதமா மமுத மொழுகிய வாயால்

          விடமென வுரைத்தன ரன்றே.

35

     (இ-ள்) அவ்வாறு கருதி யாவற்றிற்கும் முதன்மையான நாயகனாகிய அல்லாகு சுபுகானகுவத்த ஆலாவின் கட்டளையின் வண்ணமல்லாமல் வேறு யாதொன்றையுஞ் சிந்தியாத நியாயத்திற் பொருந்தா நிற்குந் தீனுல் இஸ்லாமென்னும் மெய்ம்மார்க்கத்தையுடைய அசுஹாபிமார்க ளனைவரையும் நிறையும்படி கூப்பிட்டு முன்னாலிருக்கச் செய்து ஜூத ஜாதியார்களில் கொடுமையைக் கொண்ட ஜூதனான அந்தக் ககுபென்பவனது செய்கைகள் துன்பத்தைக் கொண்ட வார்த்தைகளாகிய எல்லாவற்றையும் ஒழுங்காக்கிப் புறக்கானுல் கரீமென்னும் வேதமாகிய அமிர்தமானது சிந்துகின்ற தங்கள் வாயினால் விஷத்தைப் போலுஞ் சொன்னார்கள்.