இரண்டாம் பாகம்
தங்களது திவ்விய
சித்தத்திற் கிருபை செய்து எனக்கு விடை தந்து என்னை அனுப்பவும் வேண்டு மென்று கேட்டார்கள்.
4089.
அகத்தொடு முகமு மிகக்களிப் பேற
வகுமது மகிழ்ந்தணி விசயந்
தொகுத்தடை கிடந்த பருப்பதத் தோளாய்
நீதுணி யாததொன் றுளதோ
விகத்தொடு பரமுஞ் சுகத்தொடு துயரு
மெழுவகைப் பிறப்பொடி யாவும்
வகுத்தவ னுதவி யடுத்துற வேகி
வாவென விடைகொடுத் தனரால்.
38
(இ-ள்) அவர்கள்
அவ்வாறு கேட்க, அஹ்மதென்னுந் திருநாமத்தையுடைய நமது நாயகம் நபிகட் பெருமானார் நபிமுகம்மது
முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்கள் சந்தோஷித்து மனத்தினுடன் வதனமும் மிகவும்
மகிழ்ச்சியான தோங்கும் வண்ணம் அழகிய வெற்றியானது தொகுப்பா யடையாகக் கிடக்கப் பெற்ற
மலையை நிகர்த்த புயங்களையுடைய முகம்ம தென்பவரே! நீவிர் துணியாத கருமமான தொன்றுள்ளதா?
இல்லை. இம்மையுடன் மறுமையையும், இன்பத்துடன் துன்பத்தையும், எழுவகைப் பிறப்புடன்
எல்லாவற்றையுஞ் சிருட்டித்தவனான அல்லாகு சுபுகானகு வத்த ஆலாவின் உதவியானது நெருங்கிப்
பொருந்தும்படிப் போய்வாரு மென்று உத்திரவு கொடுத்தார்கள்.
4090.
மையினு மிருண்ட கருஞ்சிரத் தணிவெண்
மதிகிடந் தெனநறு மிழைப்பா
வையமற் றணிந்து கஞ்சுகி மேனி
யழகுறப் போர்த்துமுண் டகமாங்
கையினி லசாக்கோ லொன்றினைத் தாங்கிக்
காலிணைக் கபுசினிற் புகுத்தி
வெய்யவ னாவி களைதரக் களித்து
பிசுமிலென் றெழுந்தனர் வீரர்.
39
(இ-ள்) அவ்வாறு
உத்தரவு கொடுக்க, வீரராகிய அந்த அப்துல்லா றலியல்லாகு அன்கு அவர்கள் மேகத்தைப்
பார்க்கிலும் அந்தகாரமுற்ற கரியதலையின்கண் அழகிய வெண்ணிறத்தையுடைய சந்திரனானது
கிடந்ததைப் போன்று நறிய பஞ்சி நூலாற் செய்யப்பட்ட வஸ்திரத்தினாலான பாகையைச்
சந்தேகமின்றித் தரித்துச் சரீரத்தை அழகானது பொருந்தும்படி சட்டையினால் மூடித் தாமரைப்
புஷ்பமாகிய கையில்
|