பக்கம் எண் :

சீறாப்புராணம்

1491


இரண்டாம் பாகம்
 

4097.  உலகினி லெவருஞ் செய்கிலாத் தன்மை

          யுண்டுபண் ணிக்கொண்டு விதியென்

     றலகிலா நிதியந் தனைச்சதக் காவென்

          றவரவர்க் களித்தனன் பறித்து

     நிலையிலா தடியேன் வெறுங்கையு மானே

          னென்பது நினைந்தில னின்னு

     மலைவுற தீனர்க் களித்திடு மென்றா

          னேதென வறைகுவ னையா.

46

     (இ-ள்) ஐயரே! இந்த உலகத்தில் ஒருவருஞ் செய்யாத ஓர் வித்ததைத் தானாகவே யுண்டாக்கிக் கொண்டு அதை ஊழென்று சொல்லிக் கணக்கற்ற திரவியத்தைச் சதக்காவென்று பறித்து அவரவர்களுக்குக் கொடுத்தான். அடியேனாகிய யான் நிலையின்றி வெறுங்கையை யுடையவனாகவு மாயினேனென்பதையுங் கருதிலன். இன்னமும் மயக்கத்தைப் பொருந்தும் வண்ணம் தீனுல் இஸ்லாமென்னும் மார்க்கத்தை யுடையவர்களுக்குக் கொடுமென்று சொன்னான். அச்சமாச்சாரத்தை யான் யாதென்று சொல்லுவேன்.

 

4098.  தொன்றுதொட் டுவந்த வடிவுறுஞ் சமயந்

          தூடணித் திடும்பவ மெல்லா

     மின்றுதொட் டடியேன் கவலையுள் ளழிய

          விப்படி யியற்றிய வினிமேற்

     பின்றொட ராது கொடுமையுஞ் செய்யா

          பேதையர் மனங்குழைந் திரங்குந்

     தென்றிகழ் வடிவோய் நின்முகங் கண்டேன்

          றீர்ந்ததென் றுன்பமென் றிசைத்தார்.

47

     (இ-ள்) மாதர்கள் தங்கள் இதயமானது குழையப் பெற்றுக் கசியா நிற்கும் அழகு பிரகாசிக்கின்ற வடிவத்தையுடைய ககுபே! நான் ஆதி காலந் தொடங்கி யுண்டாகிய அழகு பொருந்திய நமது மார்க்கத்தை நிந்தித்த பாதக மனைத்தும் இன்று முதல் அடியேனாகிய யான் சஞ்சலத்தினால் மனமான தழியும்படி இவ்வாறு செய்தது. இனிமேல் அம்மார்க்கத்தைப் பின்பற்றாமலும் பொல்லாங்கு செய்யாமலும் உமது வதனத்தைப் பார்த்தேன். எனது துயரமொழிந்த தென்று சொன்னார்கள்.

 

4099.  கண்ணினீர் ததும்ப மெய்யெனப் பேசுங்

          கட்டுரை காதினிற் கேட்டான்

     றிண்ணிய கரங்கா றட்டியே சினத்தான்

          றீப்பொறி யுகவிழி சிவந்தான்