இரண்டாம் பாகம்
வெண்ணிலா மௌலித் தலையினை யசைத்தான்
விலாவிற வெடிபடச் சிரித்தா
னுண்ணிறை மனத்தின் வெஞ்சின முற்றா
னூழ்விதி முடிவினை யறியான்.
48
(இ-ள்) கண்களி
லிருந்து நீரானது ததும்பும் வண்ணம் அவ்வாறு உண்மையைப் போலுஞ் சொல்லிய பொய் வார்த்தைகளைப்
பண்டைக் காலத்திற் கற்பிக்கப்பட்ட தனது விதியினது இறுதியைத் தெரியாதவனான அந்தக் ககுபென்பவன்
தனது காதுகளினாற் கேள்வியுற்றுப் பருத்த இருகைகளையுங் கால்களையுந் தட்டிக் கோபித்து அக்கினிப்
பொறியானது சிந்தும்படி இருகண்களுஞ் செந்நிற மடையப் பெற்று வெள்ளிய பிரகாசத்தைக் கொண்ட
கிரீடத்தைத் தரித்த சிரத்தை யாட்டி இருவிலாப்புறமும் வெடிக்கும் வண்ணம் ஓசையுண்டாகும்படி
சிரித்து உண்மை நிறைந்த இதயத்தின் கண் வெவ்விய கோபத்தைப் பொருந்தினான்.
4100.
வரையெனத் திரண்டு பெருமையு முரணும்
வளர்தர வெழும்புய சல்மா
அருமையி னுதித்து முகம்மது வென்ன
வழகுற வருஞ்செல்வ மகனே
விரைவுற நீயும் பேதுற வஞ்ச
வேலியிற் கிடந்துழன் றனையோ
பரிவினி லவனாற் குறைசியோர் பட்ட
பாட்டையுங் கேட்டறி கிலையோ.
49
(இ-ள்) அவ்வாறு
பொருந்தி மலையைப் போலுந் திரட்சியுற்றுப் பெருமையும் வலிமையு மோங்கும் வண்ண மோங்கிய தோள்களையுடைய
சல்மாவென்பவரது அருமையினால் இவ்வுலகத்தின் கண் அவதரித்து முகம்மதென்று அழகு பொருந்தும்படி வந்த
வளப்பத்தைக் கொண்ட புதல்வரே! நீரும் வேகமாக மயக்கமுறும் வண்ணம் மாயமாகிய வேலியுட் கிடந்து
வருத்தப்பட்டீரோ? அந்த முகம்ம தென்பவனாற் குறைஷிச் சாதியார்கள் அனுபவித்த துன்பத்தையும்
அன்புடன் கேட்டு அறியவில்லையா?
4101.
பத்தியீ தென்னக் காரண மென்றோர்
பாசுரத் தெவரையும் விசித்து
வத்திரம் பலபன் மணியொடு நிதியும்
வழக்கொடுங் கணக்கொடும் வௌவி
நித்தமுங் கெடுப்பன் றமரின்மேல் வாஞ்சை
நினைவறக் கருத்தையுங் கலைப்பன்
வித்தக வறிநீ முடிவினுங் கூட்டி
வேண்டிலா நரகினில் விடுவன்.
50
|