இரண்டாம் பாகம்
4106.
ஆவியென் றுதித்த தனையரைப் பிடித்தங்
கடவுவைத் திடினவ ரவரே
மேவின மான மிழிதரத் துயரின்
விற்றிடுந் தொழும்பரென் றுரைத்து
நாவினிற் சுடுவா ராதலா லிஃது
நன்மையன் றிருங்கதிர் வீசித்
தாவிய வுடைவா ளுவமையி லாது
தருவனும் மிடத்தினி லடியேன்.
55
(இ-ள்) அவன் அவ்வாறு
சொல்ல, அதற்கு அவ்விடத்தில் அவர்கள் உயிரைப் போன்று தோற்றிய புத்திரர்களைப் பிடித்து
ஈடாக வைத்தால் அவரவர்கள் பொருந்திய அபிமானமான திழியும்படி துன்பத்தோடும் விற்கின்ற வேலையான
னென்று சொல்லி நாவினா லென்னைச் சுடுவார்கள். ஆதலினால் இதுவும் நல்லதல்ல, அடியேனாகிய யான்
பெரிய பிரகாசத்தை யெறிந்து தாவிய எனது உடைவாளை யொப்பின்றி ஈடாக உம்மிடத்திற் கொடுப்பேன்.
4107.
தருவதும் பகலே கொடுவர மாட்டேன்
றரணிமேற் றிசைக்கடற் சார
விருளுறும் பொழுதின் மறைதர விவண்வந்
தீடுவைத் திடுவனென் றுரைத்தார்
பிரியமுற் றவனுங் கேட்டுள மியைந்து
பிறழ்ந்தொளி வீசுமெய் யணியோய்
விரைவுடன் மனையிற் சேறியென் றுரைப்ப
மிகமகிழ்ந் தெழுந்துபோ யினரால்.
56
(இ-ள்) அப்படிக் கொண்டு
வந்து கொடுப்பதும் பகற் காலத்திற் கொண்டு வந்து கொடுக்க மாட்டேன். சூரியனானவன் மேற்றிசையிலுள்ள
சமுத்திரத்தின் கண் பொருந்த அந்தகாரமான துண்டாகின்ற இராக்காலத்தில் மறைவாய் இங்கே கொண்டு
வந்து அடவாக வைப்பேனென்று சொன்னார்கள். அதை அந்தக் ககுபென்பவனும் விருப்பமுற்றுக் கேட்டு
அதற்கு மனச் சம்மதப்பட்டுத் திரும்பிப் பிரகாசத்தை வீசா நிற்குஞ் சரீரத்தின் கண் தரித்த
ஆபரணத்தை யுடைய முகம்மதே! நீர் வேகத்தோடும் உமது வீட்டிற் போய்ச் சேருவீராகவென்று
சொல்ல, அவர்களும் மிகக்களிப்படைந்து அவ்விடத்தை விட்டு மெழும்பிச் சென்றார்கள்.
4108.
வீரனு மனையிற் புக்கின னரிய
விரிசிறைப் பறவைக ளனைத்து
மார்வமு மொடுங்கிக் குடம்பையி னடைய
வாயிரங் கரங்களுஞ் சுருக்கிப்
|