பக்கம் எண் :

சீறாப்புராணம்

1497


இரண்டாம் பாகம்
 

     (இ-ள்) அவ்வா றெழும்பிய அவர்கள் தங்களது நேசத்திற்கு உரிமையர்களான பிராணனைப் போலுஞ் சிறந்த நான்கு சஹாபாக்களை விரைவிற் கூப்பிட்டு அன்பானது பொருந்தும் வண்ணந் தங்களோடு வரும்படி கூட்டிச் சென்று அறிவில்லாதவனான அந்தக் ககுபென்பவனது வீட்டுத் தலைவாயிலி னுட்பக்கத்தில் ஒருபுறத் திருக்கும்படி செய்து மற்றவரான அந்த முகம்மது றலியல்லாகு அன்கு அவர்களுமொரு பக்கத்தி லிருந்து கண்களி னறிவானது பற்றாத அந்த இருட் காலத்தில் அல்லாகு சுபுகானகு வத்த ஆலாவைத் துதித்து வெவ்விய புலியைப் போலுங் ககுபென்று சொல்லிக் கூப்பிட்டார்கள்.

 

4111.  கேட்டனன் மனையுள் ளிருந்தனன் பகலே

          கிளத்திய வாய்மையின் படியே

     வேட்டலுற் றுவந்தான் சொன்மொழி தவறா

          மேன்மைய னொழுக்கமு முடைய

     னீட்டிய புகழா னிவனென மனத்தி

          னினைந்தனன் களபமு மணிந்து

     நாட்டமுற் றினிதி னெழுந்தன னெழலு

          நன்மொழி மனையவ ணவில்வாள்.

60

     (இ-ள்) அவ்வாறு கூப்பிட, வீட்டினு ளிருந்தவனான அந்தக் ககுபென்பவன் கேள்வியுற்று இன்று பகல் சொல்லிய சொற்பிரகாரம் இந்த முகம்ம தென்பவன் விருப்ப முற்று இங்கு வந்தனன். இவன் சொன்ன வார்த்தையில் நின்றும் பிசகாத மேன்பாட்டை யுடையவன். சன்மார்க்கமு முடையவன். தேடிய கீர்த்தியையு முடையவனென்று இதயத்தின்கண் சிந்தித்துக் கலவைச்சாந்தும் பூசி ஆசையுற்று இனிமையோடு மெழும்பினான். அப்படி யெழுந்த மாத்திரத்தில் அவனது மனைவியானவள் நன்மை பொருந்திய சில வார்த்தைகளைச் சொல்லுவான்.

 

4112.  மையினு மிருண்ட விருளறக் கொடிது

          மனத்தினி னினைக்கொணாக் கபடும்

     பொய்யும்வஞ் சகமும் கொலையொடு சூதும்

          பொருந்திய செறுநருண் டதலாற்

     செய்யமாண் பமைந்த திறன்மிகு துணைவர்

          சேறலுக் கொருவரு மிலையா

     லையகோ துணையே யருங்குலக் களிறே

          வாருயிர் தாங்கிய வரசே.

61 

      (இ-ள்) ஐயோ! எனது நாயகரே! அருமையான எங்கள் குலத்திற்கு யானை போல்பவரே? அரிய ஆவியைச் சுமந்த