இரண்டாம் பாகம்
அண்ணலே! மேகத்தைப்
பார்க்கிலும் மிக இருட்சியடைந்த இந்த அந்தகாரமானது அதிக வெவ்வியதா யிருக்கின்றது. அன்றியும்
இதயத்தின் கண் எண்ணத் தகாத கபடத்தையும் அசத்தியதையும் மாயத்தையும் கொலையுடன் சூதையும்
பொருந்திய சத்துராதிக ளிருக்கின்றார்கள். ஆதலினால் அழகிய மாட்சிமை தங்கிய வலிமை மிகுத்த
நேசர்க ளொருவருங் கூடவருவதற் கில்லர்.
4113.
நோக்கிய விழியும் வேயெனுந் தோளு
நொய்துற வலத்தினிற் றுடித்த
தீக்கொடுங் கனவொன் றெய்தவு மறிந்தேன்
செந்நிறக் குருதிவா சமுமென்
மூக்கினி லேதோ தோற்றிய தின்னே
முற்றிய வினைப்பய னியாதென்
றேக்கமுற் றிரங்கி யடிக்கடி நோக்கி
யிருமிரு மிருமென விசைத்தாள்.
62
(இ-ள்) தங்களைப்
பார்த்த எனது கண்களும் மூங்கி லென்று சொல்லுந் தோள்களும் விரைவாக வலப்பக்கத்தில் துடித்தன.
தீமையைக் கொண்ட ஒரு வெவ்விய கனவானது வந்து பொருந்தவுங் கண்டேன். ஏதோ? எனது நாசியில் சிவந்த
நிறத்தையுடைய இரத்த வாசமும் வீசுகின்றது. இப்பொழுது விளையும் ஊழ்விதியினது பிரயோசனமானது
யாதென்று திகிலடைந்த அழுது அவனை அடிக்கடிப் பார்த்து இருங்கள்! இருங்கள்!! இருங்கள்!!! என்று
சொன்னாள்.
4114.
மனையவள் மொழிகேட் டணிமுடி துளக்கி
வாளெயி றிலங்கிட நகைத்துக்
கனியிதழ்த் தேனே பெண்மதி யதனாற்
கழறினை யுலகினி லெனக்கோர்
தனிமையு முளதோ வினையுமிங் குளதோ
சஞ்சல மதிதனை யகற்றென்
றினையன வுரைத்துக் கடைத்தலை யேகி
முகம்மது முன்னர்வந் திருந்தான்.
63
(இ-ள்) அவ்வாறு
சொன்ன தனது மனைவியினது வார்த்தைகளை அந்தக் ககுபென்பவன் கேள்வியுற்று அழகிய தனது தலையி
லிருந்த கிரீடத்தை யசைத்து ஒள்ளிய பற்களானவை பிரகாசிக்கும் வண்ணஞ் சிரித்துப் புஷ்பங்களி
னிதழ்களி லிருந்தொழுகா நிற்கும் இனியதேன் போல்பவளே! நீ பெண் புத்தியினால் இவ்வாறு
சொன்னாய். இவ்வுலகத்தின். கண் எனக்கு ஒரு ஏகாந்தமு முள்ளதோ? இவ்விடத்தில் வினையுமுள்ளதா?
இல்லை. ஆதலால் உனது கவலையைக் கொண்ட புத்தியை மாற்றி
|