பக்கம் எண் :

சீறாப்புராணம்

1511


இரண்டாம் பாகம்
 

      (இ-ள்) என்று கொடிய கோபமான ததிகரிக்கும் வண்ணங் கூறிய கபடத்தைக் கொண்ட பாதகனான அந்த அபாசுபியா னென்பவனும் அந்தத் தினத்தில் அன்பு மிகுந்த அரசர்களான காபிர்கள் தன்னை வளைந்து வரும்படி அங்கு வந்தான்.

 

4144.  பொன்பன் மாமணி பூடண

     மென்ப யாவையு மேயவ

     னன்பி னாலவி டத்தில்வைத்

     தின்ப மாகவி ருந்தனன்.

5

      (இ-ள்) அவ்வாறு வந்த அவன் திரவியங்களையும் பெருமை பொருந்த பல இரத்தினங்களையும் ஆபரணமென்று சொல்லப்பட்ட யாவையும் நேசத்தோடு மவ்விடத்தில் வைத்துச் சந்தோஷமாக இருந்தான்.

 

4145.  கறுபு பெற்றிடுங் கான்முளை

     மறுபு றந்தரப் பதுறினி

     னிறுபு யத்தொடீண் டினனென

     வுறுபு யத்தர்மு னோதினார்.

6

     (இ-ள்) அவன் அவ்வாறிருக்க, தூதுவர்கள் வந்து ஓங்கா நிற்குந் தோள்களை யுடையவர்களான நமது நாயகம் நபிமுகம்மது முஸ்தபா காத்திமுல் அன்பியா றசூல் சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்களது சந்நிதானத்தில் ஹறுபென்பவன் பெற்ற புதல்வனாகிய அபாசுபியானென்பவன் பின்புறங் காட்டித் தோல்வியுற்றோடும் வண்ணம் ஒடியா நிற்குந் தோள்களோடும் பதுறென்னுந் தானத்தில் வந்து கூடியிருக்கின்றா னென்று சொன்னார்கள்.

 

4146.  செவியிற் கேட்ட திறனபி

     புவியு ளோர்கள் புகழ்ச்சியா

     னவிலு மாமதீ னத்தினி

     லபுதுல் லாவை யமைத்தனர்.

7

      (இ-ள்) அவ்விதஞ் சொன்ன சமாச்சாரத்தைக் காதுகளினாற் கேள்வியுற்ற தைரியத்தைக் கொண்ட நமது நாயகம் நபிகட் பெருமானார் நபி அஹ்மது ஹாமிது முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்கள் இப்பூமியின் கண்ணுள்ள யாவர்களுங் கீர்த்தியினாற் புகழா நிற்கும் பெருமை பொருந்திய திருமதீனமா நகரத்தின் கண் அப்துல்லா றலியல்லாகு அன்கு அவர்களை அரசாக இருக்கும்படி செய்தார்கள்.

 

4147.  புரவி சுற்றிடப் போர்மனர்

     பரவி மெய்ப்பதம் பற்றிட

     விரைவின் மெய்க்கதிர் வீசிட

     விரவி யொப்ப வெழுந்தனர்.

8