பக்கம் எண் :

சீறாப்புராணம்

1512


இரண்டாம் பாகம்
 

      (இ-ள்) அவ்வாறு செய்து குதிரைகள் தங்களைச் சூழவும், யுத்தஞ் செய்கின்ற அரசர்களான சஹாப்பாக்கள் எவ்விடத்தும் படர்ந்து உண்மையையுடைய தங்களது திருவடிகளைப் பொருந்தவும், வேகத்தோடுந் தங்கள் சரீரத்தின் கண்ணுள்ள பிரகாசமானது நான்கு பக்கங்களிலு மெறிக்கவும், சூரியனைப் போலு மெழும்பினார்கள்.

 

4148.  படிய திர்ந்தெழு பல்லிய

     மிடிமு ழக்கென வெங்கணு

     மடிப டப்பகி ரண்டமும்

     வெடிப டத்தொனி வீசின.

9

      (இ-ள்) அவ்வாறு எழும்ப, இப்பூமியானது குமுறி யோங்கா நிற்கும் பலவாச்சியங்கள் எவ்விடத்தும் இடியினது முழக்கத்தைப் போலும் அடிபடப் பெரிய ஆகாய லோகங்களும் வெடிபடும் வண்ணம் ஓசையை வீசின. 

 

4149.  குடைநி ழற்றவெண் கொடிசெல

     விடையி டக்கய மெய்திட

     வடமி குத்தம னவரெலாம்

     புடைவ ரத்தனி போயினார்.

10

      (இ-ள்) அவ்வாறு வீச, நாயகம் நபிகட் பெருமானார் நபிமுகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்கள் கவிகைகள் நிழலைச் செய்யவும், வெண்ணிறத்தைக் கொண்ட துவஜங்கள் முன்னாற் போகவும், யானைகள் இடைகளிற் பொருந்தி வரவும், மணிவடங்களானவை யதிகரிக்கப் பெற்ற அரசர்களான அசுஹாபிமார்க ளியாவரும் பக்கத்திற் சூழ்ந்து வரவும், ஒப்பறப் போனார்கள்.

 

4150.  விண்க டந்தவே தண்டமுங்

     கண்க டந்தெழு கானமு

     மண்க டந்துபோய்ப் பதுறினி

     னெண்க டந்தவ ரெய்தினார்.

11

      (இ-ள்) ஆகாயத்தைத் தாண்டிச் செல்லா நிற்கும் மலைகளையும், கண்களி னொளியைத் தாண்டி யோங்குகின்ற காடுகளையும், மற்றப் பூமிகளையும், அவ்வாறு தொலைத்துச் சென்று மதிப்பை விட்டு மகன்றவர்களான நமது நாயகம் நபிகட் பெருமானார் நபிமுகம்மது முஸ்தபா அஹ்மது முஜ்தபா றசூல் சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்கள் அந்தப் பதுறென்னுந் தானத்திற் போய்ச் சேர்ந்தார்கள்.