இரண்டாம் பாகம்
4163.
பொருவி லாத்திறங் குடிபுகு மடலலிப் புலியைக்
கருவெ னத்தரித் தீன்றெடுத் துவந்துநற் கதியின்
மருவி யோருரு வழுத்திய பாத்திமா மயங்க
வருமை மேனியி னடிக்கடி வந்ததா யாசம்.
6
(இ-ள்) ஒப்பற்ற வல்லமையானது
வாசமாக வீற்றிருக்கப் பெற்ற வெற்றியைக் கொண்ட புலியாகிய அலியிபுனு அபீத்தாலிபு றலியல்லாகு
அன்கு அவர்களைக் கருவென்று சொல்லி வயிற்றின் கண் பூண்டு இவ்வுலகத்திலுயிர்த்துக் கைகளினால்
தாங்கி மகிழ்ந்து நல்ல பதவியிற் பொருந்தி யொப்பற்ற வடிவமாகப் பாராட்டிய பாத்திமா றலியல்லாகு
அன்ஹா அவர்கள் மயங்கும் வண்ணம் அவர்களது அருமையான சரீரத்தின் கண் அடிக்கடி சோர்வானது வந்தது.
4164.
இருந்த நாட்சரி யெனமலச் சடத்தையிங் கிருத்தி
வருந்தி நாடொறு முகம்மதை மகவென வளர்த்துத்
திருந்து மேன்மையர் விறலபித் தாலிபின் றேவி
பொருந்தி னார்மனம் விசும்பினிற் குடிபுகப் போத.
7
(இ-ள்) அவ்வாறு வர,
நமது நாயகம் நபிகட் பெருமானார் நபிமுகம்மது முஸ்தபா அஹ்மது முஜ்தபா றசூல் சல்லல்லாகு அலைகி
வசல்ல மவர்களைத் தமது புதல்வரென்று பிரதி தினமும் வருத்தமுற்று வளர்த்துத் திருந்திய மேன்மையை
யுடையவராகிய வீரத்தைக் கொண்ட அபீத்தாலிபென்பவரது நாயகியாரான அந்தப் பாத்திமா றலியல்லாகு
அன்ஹா அவர்கள் இவ்வுலகத்தின் கண் இருந்த நாட்கள் சரியென்று மலத்தைக் கொண்ட இந்தத் தேகத்தை
இவ்விடத்திற்றானே இருக்கும்படி செய்து வானலோகத்தினிடத்து வாசமாகச் செல்லும் வண்ணம் தங்களிதயத்தின்
கண் பொருத்த முற்றார்கள்.
4165.
கார ணத்தொடுந் தீன்மிக வாழ்கெனக் கழறிப்
பூர ணச்சசி யெனுமிற சூலையும் போற்றி
யார ணக்கலி மாவினை யடிக்கடி யியம்பித்
தார ணித்தலம் விடுத்துவிண் ணுலகினைச் சார்ந்தார்.
8
(இ-ள்) அவ்வாறு
பொருத்தமுற்ற அவர்கள் தீனுல் இஸ்லாமென்னும் மெய்ம்மார்க்கமானது காரணத்தோடும் மிகவாக வாழக்கடவதென்று
கூறிப் பூரணச்சந்திர னென்று சொல்லும் றசூலாகிய நமது நாயகம் நபிகட் பெருமானார் நபி ஹாமிது
அஹ்மது முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்களையும் புகழ்ந்து புறக்கானுல்
அலீமென்னும் வேதத்தினது ழுலாயிலாஹ இல்லல்லாகு முஹம்மதுர்ற சூலுல்லாஹிழு யென்னுங் கலிமாவை அடிக்கடி
சொல்லி
|