பக்கம் எண் :

சீறாப்புராணம்

1521


இரண்டாம் பாகம்
 

(இ-ள்) இந்த வுலகத்தினிடத்து மேலே கூறிய இந்த ஐந்து பேர்களையும் பெற்றெடுத்து அதிகரித்த சிறப்பையும் ஓங்கிய பதவியையும் அணிந்து கொண்டதனால் எனது அருமையான மாதாவாகிய அந்தப் பாத்திமா றலியல்லாகு அன்ஹா அவர்களுக்குத் தகுதியோடும் இவ்விதமாகச் சிறப்புகள் செய்தேனென்று சொன்னார்கள்.

 

4176.  திருநபி தருமொழி செவியிற் கேட்டலு

     மொருவருக் கொருவருள் ளுவகை கூர்ந்துநற்

     பரிவொடும் பாத்திகா வோதிப் பண்புடன்

     மருவிய மனையிடம் வந்து புக்கினர்.

19

     (இ-ள்) தெய்வீகந் தங்கிய நமது நாயகம் நபிகட் பெருமானார் நபிகாத்திமுல் அன்பியா முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்கள் அவ்வாறு சொன்ன வார்த்தைகளை அசுஹாபிமார்கள் காதுகளாற் கேட்ட மாத்திரத்தில், தங்களில் ஒருவருக் கொருவர் மனதின் கண் சந்தோஷமானது அதிகரிக்கப் பெற்று நல்ல அன்போடும் பாத்திஹா ஓதி நேசத்துடன் தாங்கள் தங்கிய வீட்டின் கண் வந்து சேர்ந்தார்கள்.

 

4177.  மறைமுறைப் படிசடங் கமைத்து மாசறக்

     குறைபடு துயரினைத் துடைத்துக் கோதிலா

     திறையவன் றனைப்பணிந் தின்ப மாட்சிபெற்

     றறிவுட னபியர சாளு நாளினில்.

20

     (இ-ள்) அவ்வாறு சேர, நமது நாயகம் நபிகட் பெருமானார் நபிசெய்யிதுனா செய்யிதுல் முறுசலீன் ஹபீபுறப்பில் ஆலமீன் காத்திமுல் அன்பியா முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்கள் புறக்கானுல் அலீமென்னும் வேத வொழுங்கின பிரகாரம் கிரியைகளைச் செய்து களங்கமறும் வண்ணங் வெறுப்பைப் பொருந்திய துன்பத்தை யொழித்துக் குற்ற மில்லாது யாவற்றிற்குங் கடவுளான ஜல்ல ஜலாலகுவத்த ஆலாவைத் தொழுதி சந்தோஷத்தையும் பெருமையையும் பெற்று அறிவோடும் அரசாட்சி செய்கின்ற காலத்தில்.