இரண்டாம் பாகம்
4195.
அன்னது போய தாலென் னசறெனுந் தொழுகை யொன்றுண்
டுன்னுமத் தொழுகை தீனோ ரென்பவர்க் குரிய தன்றோ
மன்னிய புலன்க ளைந்து மனவெளி வழியிற் செல்லப்
பன்னிய நிலத்தின் வீழ்ந்து பத்தியின் முடிக்க வேண்டும்.
18
(இ-ள்) அந்த லுகறுத்
தொழுகை நிறைவேறிப் போனதினா லென்ன? ஒன்று மில்லை. இன்னமும் அசறென்று சொல்லு மொருதொழுகை
யுள்ளது. அந்தத் தொழுகையுந் தீனுல் இஸ்லாமென்னும் மார்க்கத்தை யுடையவர்க ளென்று சொல்லப்பட்டவர்களுக்குக்
கடமையானது. அதை அவர்கள் பொருந்திய பஞ்சபுலன்களும் மனவெளியினது வழியிற் செல்லும் வண்ணம்
நெருங்கிய பூமியின்கண் விழுந்து அன்போடும் நிறைவேற்ற வேண்டும்.
4196.
குத்திரம் விளைவித் தாலுங் கொலைத்தொழி லண்மி னாலும்
பித்துழன் றவர்போ னின்ற நிலையன்றிப் பிறிது நோக்கா
ரத்தரு ணத்தி னேகி யாங்கவ ராவி சோரச்
சித்திர வகையின் வீழ்த்தித் தெறுதலே கரும மென்றான்.
19
(இ-ள்) அவ்விதம் நிறைவேற்றும்போது
குரூரச் செய்கைகளைச் செய்வித்தாலுங் கொலைத் தொழிலானது வந்து சேர்ந்தாலும் அவர்கள் பித்தத்தினா
லுழன்றவர்களைப் போலத் தாங்கள் நின்ற நிலையேயல்லாமல் வேறொன்றையும் பாரார்கள். அந்தச்
சமயத்தில் நாம் அங்குச் சென்று அவர்களது பிராணனானது மெலிவடையும் வண்ணம் அவர்களைக் கண்ட துண்டமாக
வெட்டிப் பூமியில் விழும்படி செய்து கொல்லுவது தான் காரியமென்று சொன்னான்.
4197.
நன்றிதென் றுவகை கூர்ந்து நகைமணித் தொடையல் வேய்ந்த
குன்றெனப் பணைத்து வீங்குங் குவவுத்தோட் குமர ரெல்லா
மின்றொடும் பகைவே றின்றி யிற்றுறத் துடைப்பே மென்று
வன்றிறல் தீனோர் செய்யும் வணக்கமே நோக்கி நின்றார்.
20
(இ-ள்) அவன் அவ்வாறு
சொல்ல, இந்தச் சமாச்சாரம் நன்மையையுடைய தென்று சொல்லிச் சந்தோஷமானது அதிகரிக்கப் பெற்றுப்
பிரகாசத்தைக் கொண்ட இரத்தினாரங்களைத் தரித்த மலைகளைப் போலும் பருத்து ஓங்கா நிற்குந்
திரண்ட தோள்களையுடைய காளையர்களான அந்தக் காபிர்களனைவரும் இன்றோடும் நமக்கு விரோதமானது
வேறில்லாமற் கெட்டுப் போகும் வண்ணம் இல்லாமற் செய்வேமென்று சொல்லி வலிய
|