பக்கம் எண் :

சீறாப்புராணம்

1529


இரண்டாம் பாகம்
 

வீரத்தைக் கொண்ட தீனுல் இஸ்லாமென்னும் மெய்ம் மார்க்கத்தையுடைய முஸ்லிம்கள் செய்யுந் தொழுகையைப் பார்த்து நின்றார்கள்.

 

4198.  ஈங்கிவ ரிருப்ப வானோர்க் கிறையிறை யருளின் வண்ணத்

     தோங்கிய விசும்பை நீந்தி யுறுபொரு ளுணர்த்தும் வேதந்

     தாங்கிய வெழிலா யத்துத் தலைமிசை கொண்டி ழிந்தார்

     நீங்கரும் பயம்வந் தெய்து நிலத்திடை தொழுதற் கன்றே.

21

     (இ-ள்) இவ்விடத்தில் இந்தக் காபிர்கள் அவ்வாறு இருக்க, தேவர்களான மலாயிக்கத்துமார்களுக்கு அதிபதியாகிய ஜிபுரீ லலைகிஸ்ஸலா மவர்கள் யாவற்றிற்குங் கடவுளான ஜல்ல ஷகுனகு வத்த ஆலாவின் காருண்ணியத்தின் படி ஓங்கிய வானலோகத்தை விட்டும் நீங்கி நீங்கள் பூமியினிடத்துத் தொழுவதற்கு நீங்குதற் கருமையான அச்சமானது வந்து சம்பவிக்குமென்று பொருந்திய அர்த்தத்தை யறிவிக்கும் புறுக்கானுல் மஜீதென்னும் வேதமானது பொறுத்த அழகிய ஆயத்தென்னும் வேதவசனத்தைத் தலையின் மீது கொண்டு இறங்கினார்கள்.

 

4199.  ஆரணப் பொருளை யோர்ந்த அளவினில் அசறு தோன்றப்

     பூரணத் தொழுகை கொண்ட புணர்ப்பொடு பாங்கெல் லோர்க்கு

     நேருற விளங்க வள்ள னின்றதீ னவர்க டம்மைத்

     தாரணி யிடத்தி ரண்டு பாகமாய்த் தனிபி ரித்தார்.

22

     (இ-ள்) புறக்கானுல் கரீமென்னும் வேதத்தினது வசனமாகிய அவ்வாயத்தின் அர்த்தத்தை வள்ளலான நமது நாயகம் நபிகட் பெருமானார் நபி செய்யிதுல் முறுசலீன் ஹபீபுறப்பில் ஆலமீன் முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்கள் அறிந்த மாத்திரத்தில், அசறு தொழுகைக் கேற்பட்ட நேரமானது வர, நிறைவாகிய தொழுகையானது கொண்ட புணர்ப்போடு முறைகள் ஒழுங்கு பொருந்தும் வண்ணம் யாவருக்குந் தெரியும்படி அங்கு நின்ற தீனுல் இஸ்லாமென்னும் மெய்ம்மார்க்கத்தை யுடைய முஸ்லிம்களை இப்பூமியினிடத்து ஒப்பற இரண்டு பங்காகப் பிரித்தார்கள்.

 

4200.  ஒன்னலர்க் கெதிரோர் கூட்ட முறமற்றோர் கூட்ட மௌமூ

     மென்னநின் றுறஇ மாமா யியனபி தக்பீர் கட்டி

     நன்னிலை றுக்கூவி னோடு சுசூதிவை நடத்தி ரண்டாம்

     பின்னிலை யெய்த அன்னோர் நிய்யத்திற் பிரிதல் கொண்டே.

23