பக்கம் எண் :

சீறாப்புராணம்

1530


இரண்டாம் பாகம்
 

      (இ-ள்) அவ்வாறு பிரித்துச் சத்துராதிகளாகிய அந்தக் காபிர்களுக்கு எதிராக ஒரு கூட்டம் நிற்கவும், மற்ற ஒரு கூட்டம் மௌமூமென்று சொல்லும்படி நிற்கவும், ஒழுங்கையுடைய நமது நாயகம் நபிகட் பெருமானார் நபி முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்கள் இமாமாகத் தக்பீர்கட்டி நல்ல நிலையாகிய றுக்கூவுடன் கஜூதாகிய இவைகளை நடத்தி இரண்டாவதாகிய பின்னிலை பொருந்தும் வண்ணம் அவர்கள் தங்களது நிய்யத்தாகிய சிந்தனையில் நின்றும் பிரிதல் கொண்டு.

 

4201.  மற்றுள கரும மெல்லாந் தாங்களா முடித்து மாற்றார்

     உற்றுள திசைபோய் நிற்க வுற்றவக் கூட்டம் வந்து

     பற்றியின் தக்பீர் கட்டித் தொடர்ந்திடப் பயில்றுக் கூவு

     நற்றுறை சுசூதுஞ் செய்து நாயக ரிருப்பின் மேவ.

24

      (இ-ள்) வேறுள்ள காரியங்க ளனைத்தையுந் தாங்களாகவே நிறைவேற்றிச் சத்துராதிகளான அந்தக் காபிர்கள் பொருந்தியுள்ள திக்கிற் சென்று நிற்க, பொருந்தியதான அந்தக் கூட்டம் வந்து தொடர்ந்து இனிமையான தக்பீரைக் கட்டிப் பின்பற்றப் பழகிய றுக்கூவும் நல்ல துறையாகிய சுஜூது மியற்றி நாயகரான நபிகட் பெருமானார் நபி முகம்மது முஸ்தபா அஹ்மது முஜ்தபா றசூல் சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்கள் இருப்பிற் பொருந்த.

 

4202.  ஆங்கிவ ரெழுந்தி ரண்டாம் றக்அத்தை யடுத்துச் செய்து

     பாங்கினோ டிருப்பின் மேவித் தொடர்ந்திடப் பரிவின் வள்ள

     லோங்கிய சலாமைக் கொண்டு முடித்தன ருரைத்த வாறே

     யீங்கியற் றியதி ரண்டி றக்அத்தின் கசுறா மன்றே.

25

     (இ-ள்) அவ்விடத்தில் இவர்களெழும்பி இரண்டாம் றக்ஆத்தை நெருங்கிச் செய்து ஒழுங்கோடு மிருப்பிற் பொருந்தித் தொடர வள்ளலான நமது நாயகம் நபிகட் பெருமானார் நபிமுகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்கள் அன்போடும் ஓங்கிய சலாமைக் கொண்டு நிறைவேற்றினார்கள். இங்கே சொல்லிய வண்ணஞ் செய்தது இரண்டு றக்ஆத்தின் கசறுத் தொழுகை யாகும்.

 

4203.  தீனரீ ரணியாய் நின்று தொழுதெழுஞ் செய்கை நோக்கி

     யானவித் தொழுகை யேதென் றறிந்திலே மரிய தாமான்

     மாநிலந் தனின்முன் னேனுங் கண்டதெம் மதத்துங் காணே

     மேனிவை செய்த தன்மை யாதெனத் தெளித லம்ம.

26

     (இ-ள்) தீனுல் இஸ்லா மென்னும் மெய்ம் மார்க்கத்தை யுடைய முஸ்லிம்கள் அவ்வாறு இரண்டு வரிசையாக நின்று தொழுது எழும்பிய செய்கையை அந்தக் காபிர்கள் பார்த்து இங்குத்