பக்கம் எண் :

சீறாப்புராணம்

1531


இரண்டாம் பாகம்
 

தொழுத இந்தத் தொழுகையை இன்னதென்று நாம் தெரிந்திலோம். இது அரியதாகும். இதைப் பெருமை பொருந்திய இவ்வுலகத்தின்கண் ஆதிகாலத்திலாவது பார்த்த எந்தச் சமயத்திலும் நாம் காணோம். இங்கு இயற்றிய இத்தன்மையான செய்கைகள் எதற்காக? இதை யாதென்று உணருவது.

 

4204.  மாயமோ கபடோ சூதோ வஞ்சமோ மதித்தி டாது

     பாயமோ வினைய மோமேற் பகையினை மூட்ட றானோ

     தூயவிஞ் சையினி யற்றுஞ் சூழ்ச்சியோ மாட்சி யோவெந்

     தீயெனு மதத்திற் செய்யுஞ் செய்கையோ வெனத்தி கைத்தார்.

27

     (இ-ள்) அன்றியும், இது மாயமோ? கபடமோ? சூதோ? வஞ்சகமோ? கணிக்கப்படாத தந்திரமோ? பொய்யோ? மேலும் விரோதத்தை யதிகப்படுத்தல் தானோ? பரிசுத்தமான அறிவினாற் செய்யு முபாயமோ? மாட்சிமையோ? கொடிய தீமை யென்று சொல்லு மார்க்கத்திற் செய்கின்ற செய்கையோ? இவற்றில் யாது? என்று சொல்லி மயங்கினார்கள்.

 

4205.  இன்றிவண் விளைந்த தன்மை யாதெனத் தெளிவோ மென்பார்

     நின்றினிப் பயனென் னென்பார் நேரலர் தடக்கை வாளாற்

     பொன்றுத றிண்ண மென்பார் புகழொடு வலியும் வீட்டிச்

     சென்றியாம் பிழைப்போ மென்பார் சேறலே கரும மென்பார்.

28

     (இ-ள்) அவ்வாறு மயங்கி இன்று இங்கு உண்டான தன்மையை இன்னதென்று அறிவோ மென்று சொல்லுவார்கள். இனி இங்கே நின்று பிரயோசனம் யாது? ஒன்று மில்லையென்று சொல்லுவார்கள். சத்துராதிகளது பெரிய கையி னிடத்துள்ள வாளாயுதத்தினால் நாமனைவரு மிறப்பது உண்மையென்று சொல்லுவார்கள். நமது கீர்த்தியோடு வல்லமையையுங் கொன்று விட்டு நாம் எங்காவது போய்ப் பிழைப்போமென்று சொல்லுவார்கள். அப்படிப் போவதே காரியமென்று சொல்லுவார்கள்.

 

4206.  உடைந்துடைந் தின்ன மாற்ற முரைத்துரைத் தவலித் தேங்கி

     மடிந்தபுன் மதிய ராகி வாய்வெரீஇ மனந்தள் ளாட

     வடர்ந்துவந் தெதிர்ந்த காபி ரனைவரும் வீர மானந்

     தடிந்துகைப் படைது றந்து தம்மிற்றா மிரிந்து போனார்.

29

     (இ-ள்) நெருங்கிவந்து எதிர்த்த காபிர்களாகிய அவர்களியாவரும் மிகவுந் தளர்ந்து இவ்விதமான சமாச்சாரங்களை அதிகமாய்ப் பேசிப் புலம்பி யழுது இறந்த கீழ்மையான