இரண்டாம் பாகம்
அறிவையுடையவர்களாகி அயர்ச்சியால்
வாய்குளறி மனமானது தத்தளிக்கும் வண்ணந் தங்களது வீரத்தையும் மானத்தையுங் கொன்று கரத்தினிடத்
திருந்த ஆயுதங்களை விட்டுவிட்டுத் தங்களிற் றாங்களே ஓடிப் போனார்கள்.
4207.
கதிதரு மிசுலாம் நண்ணா கத்துபா னவர் கடத்த
மதியினை வெறிதி னோக்கிப் பறிந்தன ரென்னு மாற்றந்
துதிதரு வேத நீதித் தூதர்கா தாரக் கேட்டு
மதினமா நகரை நாடி யெழுந்தனர் வல்லை மன்னோ.
30
(இ-ள்) கத்துபான் கூட்டத்தார்கள்
மோட்சத்தைத் தருகின்ற தீனுல் இஸ்லாமென்னும் மெய்ம்மார்க்கத்தில் வந்து சேராது தங்கள் தங்கள்
புத்தியை வீணாகச் செய்து தாங்க ளிருந்த விடத்தை விட்டுங் கடந்தோடினார்க ளென்று சொல்லுஞ்
சமாச்சாரத்தைக் கீர்த்தியைத் தரா நிற்கும் புறுக்கானுல் அலீமென்னும் வேத நீதியை யுடைய றசூலாகிய
நமது நாயகம் நபிகட் பெருமானார் நபி செய்யிதுனா செய்யிதுல் முறுசலீன் ஹபீபுறப்பில் ஆலமீன்
காத்திமுல் அன்பியா முகம்மது முஸ்தபா சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்கள் காதுகள் நிறையக்
கேள்வியுற்று விரைவில் திருமதீனமா நகரத்தை விரும்பி எழும்பினார்கள்.
4208.
காயுநற் கனியும் பற்றிக் கறித்துண்டு களித்துக் கொம்பிற்
பாயமர்க் கடமங் கோற்றேன் பகுப்புற வுடைந்து சிந்தி
வேயுதிர் முத்த மீர்க்கும் வெறிகமழ் விலங்க னீந்தித்
தீயவெங் கானல் வேய்ந்த செந்நிறச் சுரத்திற் புக்கார்.
31
(இ-ள்) அவ்வாறு எழும்பிக்
குரங்குகள் காய்களையும் நல்ல பழங்களையுங் கையினாற் பிடித்துக் கடித்துத் தின்று சந்தோஷமடைந்து
கொம்புகளிற் சாட, அதனால் அழகிய அந்தக் கொம்புகளி லிருந்துண்டாகும் மதுவானது பிரிதலுறும் வண்ண
மொழுகி மூங்கில்களி லிருந்து சிந்திய முத்தங்களையிழுக்கின்ற வாசனையானது பரிமளியா நிற்கும்
மலைகளைத் தாண்டிக் கொடிய வெவ்விய சூட்டினால் மூடப்பட்ட சிவந்த நிறத்தைக் கொண்ட பாலை நிலத்தில்
வந்து சேர்ந்தார்கள்.
வேறு
4209.
நீர்வ றந்துகன லேபரந்துதரு நீழ லின்றியடி யோடுறப்
பார்பி ளந்துவிட ரேநி றைந்துபணி யேமி குந்துவெளி மீதில்வெண்
டேர்செ றிந்துசுழல் காறொ டர்ந்துலவு சேணி மிர்ந்துவளர் தீயவெஞ்
சூர்ம லிந்துவிளை யாடன் மிஞ்சுகழ றோய்வ ருங்கொடிய கானமே.
32
|