பக்கம் எண் :

சீறாப்புராணம்

1534


இரண்டாம் பாகம்
 

      (இ-ள்) அன்றியும், சிவந்த தரையையுடைய அந்தப் பாலைநிலமானது தகிக்க, அதனாற் கழுகு, சேனமென்று சொல்லப்பட்ட இவைகள் தங்கள் பாதங்களை அப்பூமியில் வையாது ஆகாயத்தி லெழும்பி வயிற்றி லடித்துக் கொண்டு அடிக்கடிப் பறந்து திரிந்தன. அழகிய ஆண் யானைகள் நீண்ட தங்கள் பெட்டையானைகளோடுஞ் சுருண்டு வெந்து சரீரங்கள் சுரிக்கப் பெற்றன. வெப்பமானது வந்து சூட்டைச் செய்ய எண்டிசைகளிலு முள்ள அட்டகசங்கள் தங்கள் முகமானது வேறுபட்டுத் திரும்பின.

 

4213.  ஆல மொய்த்ததுளை மூரல் கட்செவிய ணிப்பொ றிச்சுடிகை நெட்டரா

     ஞால முற்றுமணி யேயு மிழ்த்துடலெந் நாளும் விட்டுரி கிடப்பவை

     கால மொய்த்தெரிக ளேயி றைத்தசுடு கானல் வெப்புமெய் பொறுக்கலா

     தோல மிட்டுதிர மாழை கக்கியுட லேயே ரித்துரிவ போலுமே.

36

      (இ-ள்) அன்றியும், விடத்தினால் மொய்க்கப் பெற்ற துவாரங்களைக் கொண்ட பற்களையும், கண்ணாகிய காதையும், அழகிய புள்ளிகள் பொருந்திய பணாமகுடத்தையு முடைய நீண்ட சர்ப்பங்கள் பூமி முழுவதும் இரத்தினங்களைக் கக்கி எந்நாளும் தங்கள் சரீரத்தை விட்டுங் கழற்றிய சட்டைகள் கிடப்பவை, பிரகாசிக்கும்படி மொய்த்து அக்கினிப் பொறிகளைச் சிந்திய சூட்டை செய்கின்ற கானலினது வெப்பத்தை உடலால் தாங்க முடியாமல் சத்தமிட்டு இரத்தமாகிய உலோகக் கட்டியைக் கக்கிச் சரீரமெரிந்து உரிவனவற்றை நிகர்க்கும்.

 

4214.  உலைகி டந்தகனல் புகையெ ழும்பர லுருப்ப முற்றவை தரிக்கிலா

     தலையெ றிந்துவரு கடல் படிந்துகுளி ரறல ருந்தியுடல் கருகிநீண்

     மலைய டைந்துதிசை தொறுமு லைந்துவெளி வரிதி ரிந்துநனி கதறியே

     குலைகு லைந்துநிறை பயமி குந்தழுது குயின்க ணீரொடு திரிந்ததால்.

37

     (இ-ள்) அன்றியும், மேகங்கள் உலையாகக் கிடந்த அக்கினிப் புகையானது ஓங்கா நிற்கும் பருக்கைக் கற்களினது வெப்பத்தைப் பொருந்தி அவற்றைப் பொறுக்க முடியாமல் திரைகளை வீசி வருகின்ற சமுத்திரத்திற் படிந்து குளிர்ச்சியைக் கொண்ட நீரைச் சாப்பிட்டுத் தனது மேனியானது கருகப் பெற்று நீண்ட மலைகளிற் போய் எண்டிசைகளிலு மலைந்து ஆகாயத்தின் மார்க்கமாக மீண்டு மிகவு மொலித்து அச்சுத்தால் நடுங்கி நிறைந்த பயங்கரமானது அதிகரித்து அழுது கண்ணீருடன் திரிந்தன.