பக்கம் எண் :

சீறாப்புராணம்

1555


இரண்டாம் பாகம்
 

கரும்பினது மதுரத்தை யொத்த மதுரத்தைக் கொண்ட புகழா நிற்குந் தெய்வீகந் தங்கிய கலிமா வசனத்தைச் சொல்லுவதாகிய அதுவே கருத்தாகும். அதுவே யழகாகுமென்று சொன்னான்.

 

4281. தேர்ந்து கூறிய மொழியுணர்ந் தறிவினிற் றேறி

     யோர்ந்தி யாவரு மிவரொடு மொல்லையி னெழுந்து

     வார்ந்து நீண்டெழுந் திவ்வனங் கடந்தணி மருதஞ்

     சார்ந்த பல்வள மதீனமா நகரத்திற் சார்ந்தார்.

104

     (இ-ள்) அவன் அவ்வாறு தெளிந்து சொல்லிய அவ்வார்த்தைகளை அவர்க ளனைவரு மறிந்து புத்தியால் ஆலோசித்துத் தெளிந்து இவனுடன் விரைவி லெழும்பி ஓங்கி நீட்சியுற் றெழுந்த இந்தக் காடுகளைக் கடந்து அழகிய மருதநிலஞ் சார்ந்த பல செல்வங்களை யுடைய திருமதீனமா நகரத்தின்கண் போய்ச் சேர்ந்தார்கள்.

 

4282. உம்பர் கோனகத் தணைத்திட வாரண முணர்ந்த

     விம்பர் கோனபி கமலச்செஞ் சேவடி யிறைஞ்சிக்

     கும்பி மாற்றுமந் திரக்கலி மாவுரை கூறி

     நம்பி யுள்ளத் திருத்தியீ மானினி னயந்தார்.

105

     (இ-ள்) அவ்வாறு சேர்ந்த தேவர்களான மலாயிக்கத்து மார்களுக்கு அதிபதியாகிய ஜிபுரீ லைகிஸ்ஸலா மவர்கள் தங்கள் மார்போடுங் கட்டித் தழுவ, புறக்கானுல் அலீமென்னும் வேதவசனத்தைத் தெரிந்த இவ்வுலகத்திலுள்ள யாவருக்கும் அரசரான நமது நாயகம் நபிகட் பெருமானார் நபி செய்யிதுனா செய்யிதுல் முறுசலீன் ஹபீபுறப்பில் ஆலமீன் காத்திமுல் அன்பியா முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்களது தாமரை மலரை நிகர்த்த மிகவுஞ் செந்நிறமடைந்த பாதத்தின்கண் பணிந்து நரகலோகத்திற் செல்ல வொட்டாமல் மாற்றுகின்ற மந்திரமாகிய ழுலாயிலாஹ இல்லல்லாகு முகம்மதுர் றசூலுல்லாஹிழு யென்னுங் கலிமா வசனத்தைச் சொல்லி அக்கலிமாப் பொருளை விசுவசித்து மனத்தின்கண் ணிருக்கும்படி செய்து ஈமானால் சிறப்படைந்தார்கள்.

 

4283. ஒருவ னாயனல் லாலிலை யுரியதூ திவரா

     லிருமை யும்பல னெய்துமென் றியல்புறுந் தொழுகைக்

     கருதி நோன்பொடு பறுலுசுன் னத்துகள் கற்று

     மருவி மற்றுள முறையெலாம் படித்தனர் வயவர்.

106

      (இ-ள்) வீரர்களாகிய அவர்கள் அவ்வாறு சிறப்படைந்து கடவுளான அல்லாகு சுபுகானகுவத்த ஆலாவானவன் ஒருவனே. அவனல்லாமல் வேறு இல்லை. அவனுக்கு உரிமையான