இரண்டாம் பாகம்
றசூலாகிய இந்த நாயகம் நபிகட்
பெருமானார் நபி காத்திமுல் அன்பியா முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களால்
இம்மை மறுமையென்னும் இரண்டிலும் நன்மையானது கிடைக்குமென்று தகுதி பொருந்திய வணக்கத்தைச் சிந்தித்து
நோன்புடன் பறலு, சுன்னத்தாகிய இவைகளைப் படித்துப் பொருந்தி மற்றுள்ள எல்லா முறைகளையுங் கற்றார்கள்.
4284.
பவமுந் தீமையும் வஞ்சமுங் கொலையொடு படிறு
மவமும் வேரறத் துடைத்தருந் தீனவ ராகிப்
புவியின் மீதடி தோய்தரா முகம்மதைப் போற்றித்
தவமுங் காட்சியு மெய்தியங் கவர்தலஞ் சார்ந்தார்.
107
(இ-ள்) அப்படிக் கற்ற
அவர்கள் அவ்விடத்தில் தங்களது பாவத்தையுந் தீங்கையும் வஞ்சகத்தையும் கொலையுடன் பொய்யையும்
மற்ற வீண் விடயங்களையும் வேரானதறும் வண்ணம் இல்லாமற் செய்து அருமையான தீனுல் இஸ்லாமென்னும்
மெய்ம் மார்க்கத்தை யுடையவர்களாகிப் பாதங்களானவை பூமியின் மீது படாத நமது நாயகம் நபிகட்
பெருமானார் நபிசெய்யிதுனா செய்யிதுல் குறைஷியா காத்திமுல் அன்பியா அஹ்மது முஜ்தபா முகம்மது
முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்களைத் துதித்துத் தவத்தையும் அறிவையும் பெற்றுத்
தங்க ளூரிற் போய்ச் சேர்ந்தார்கள்.
|