முதற்பாகம்
வுலவிய
வெறும்பு மொண்சிறை யீயு
மொருபொழு தாகிலுந் தீண்டாக்
கலையினின்
மயிலைப் படர்தராப் பிள்ளைக்
கனியெனு
முஹம்மது நபிக்கே.
81
(இ-ள்)
அன்றியும், பிள்ளைக்கனியென்று சொல்லா நிற்கும் நபி முகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல
மவர்களுக்கு மலம் ஜலம் முதலியவைகளின் நாற்றமுந் தோற்றாது. அவைகளைப் பிரதி தினமும்
பூமியுண்டு விடுவதேயல்லாமல் பூமியின் கண்ணுள்ள யாவர் கண்களுக்கும் புலப்படாது. நீட்சி
பொருந்திய சரீரத்தின் நிழலுங் காணப்பட மாட்டாது. உலாவித்திரிகின்ற எறும்புகளும் ஒள்ளிய
சிறகுகளையுடைய ஈக்களும் ஒரு நேரமாயினும் அவர்களின் திருமேனியைத் தீண்டாது. தரித்திருக்கும்
வஸ்திரங்களிலும் அழுக்கானது பரவாது.
372.
மாமயி
லலிமா கண்டுயில் காலை
முகம்மது
துயிலிட நோக்கித்
தாமதி யாது
சந்திர னிறங்கித்
தன்னுரு
மாறிவேற் றுருவாய்க்
காமரு மலர்த்தாள் மெல்லென வருடிக்
கதிர்மணித் தொட்டிலை யாட்டிப்
பூமண மனைக்கு
ளிருந்தடி பணிந்து
போவது தினந்தொறுந் தொழிலே.
82
(இ-ள்)
அன்றியும், பெருமை பொருந்திய மயிலாகிய ஹலிமா அவர்கள் நித்திரை செய்கின்ற இராக்
காலங்களில் சந்திரனானது நபி முஹம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்லமவர்கள்
நித்திரை செய்யும் இடத்தைப் பார்த்து விரைவினில் ஆகாயத்தை விட்டும் இறங்கிவந்து தனது
வடிவமாறி வேறுவடிவமாகிப் புஷ்பத்தினது வாசனைமாறாத ஹலிமா அவர்களின் வீட்டினகமிருந்து நபிநாயக
மவர்களின் அழகிய தாமரை மலர்போலும் திருவடிகளை மெதுவாகத் தடவிப் பிரகாசந்தங்கிய இரத்தின
வருக்கங்களையுடைய தொட்டிலை யசைத்து, பாதங்களில் வணங்கிச் செல்லுவது பிரதிதினமும் தொழிலாக
இருந்தது.
373.
இங்குவந்
துறைந்து மலரடி வருடி
யிரவெலாங் காத்தினி திருந்து
கொந்தலர்
குழலார் மனையெலா நிறைந்த
கொழுங்கதிர் பரப்பிடக் கூடி
வந்துவா
னவர்க ளிடமற நெருங்கி
மனைப்புறங் காப்பென விருப்பச்
|