பக்கம் எண் :

சீறாப்புராணம்

1603


இரண்டாம் பாகம்
 

     (இ-ள்) அவ்வாறு சுரக்கா நிற்கும் நீரினது பக்கமானது தோற்றும்படித் தோண்டிய மாத்திரத்தில், அங்கே ஒரு கற்பாறையானது பெரிய ஒரு மலை முளைத்தாற் போலுந் தெரிந்தது. இப்பூமியின் கண் பெருமை பொருந்திய கைகளை யுடையவர்களான அசுஹாபிமார்கள் அந்தக் கற்பாறை யிருக்குமிடத்தில் நெருங்கி வலிமையோடுங் கோபித்து அதை வெட்டித் துண்டங்க ளாக்கும்படி நின்றார்கள்.

 

4405. இடியி டித்தெனக் கல்லெடுத் தேற்றின ரிரும்பின்

     மடிய தாக்கினர் காய்த்திய கூருளி மாட்டி

     யடிய டித்தனர் வெட்டின ரெறிந்தன ரறுத்தார்

     கடிது கொண்டன பிளந்தில தகர்ந்தில கருங்கல்.

50

     (இ-ள்) அவ்வாறு நின்று அப்பாறையின் மீது கற்களைக் கைகளினா லெடுத்து இடி இடித்தாற் போலும் எறிந்தார்கள். இரும்புகளினாற் கெடும்படி தாக்கினார்கள் நெருப்பில் வைத்துக் காய்ச்சிய கூர்மை பொருந்திய உளிகளைக்கடாவி மாறாமலடித்தார்கள். வெட்டினார்கள். வீசினார்கள். அறுத்தார்கள். அவ்விதஞ் செய்தும், அந்தக் கருங்கல்லாலான பாறையானது பிளக்கவு மில்லை. தகரவு மில்லை. முன்னிலுங் கடுமை கொண்டது.

 

4406. வெட்டு வெட்டியே கொட்டுவாய் மடிந்ததீ விளைத்த

     நெட்டு ருக்குளி முறிந்தகூந் தாலமு நிமிர

     வெட்டி யோங்கிடப் பொடிப்பொடி யாயின வேதும்

     பட்ட தன்றியெள் ளளவினு நுறுங்கில பாறை.

51

     (இ-ள்) அன்றியும், மண்வெட்டிகள் வெட்டானது வெட்டப்பட்டுத் தமது வாய்கள் மடங்கப் பெற்றன. அக்கினியை யுண்டாக்கிய நெடிய உருக்கினாற் செய்யப்பட்ட உளிகள் முறிந்தன. கூந்தாலிகளும் உயரும் வண்ணம் மிகவுந் ஓங்கி வெட்டத் தூட்களாயின. இவ்வாறு எல்லாங் கெட்டுப் போயினவே யல்லாமல் அந்தக் கற்பாறையானது எட்பிரமாண மாயினும் நொறுங்கிலது.

 

4407. கையுஞ் சேந்திட சலித்தனர் தோளொடு காலு

     மெய்யும் வேர்வெழச் சலித்தனர் வெதும்பினர் மேன்மே

     னைய மாமனஞ் சலித்தனர் சலித்ததீ னயந்த

     செய்ய மாந்தர்க ளீதென்கொல் காணெனத் தியங்கி.

52

     (இ-ள்) அவ்வாறு நொறுங்காமலாக, அதனால் வருத்தமுற்ற தீனுல் இஸ்லாமென்னும் மெய்ம்மார்க்கமானது விரும்பியவைகளைச் செய்யா நிற்கும் ஆடவர்களான