இரண்டாம் பாகம்
(இ-ள்) அவ்வாறு
வருந்திக் கல்லை வயிற்றினிடத்து அமையும்படி வைத்துக் கட்டியிருப்பதைக் கண்களாற் பார்த்தும்
இங்கு இருந்தவர்களுக்குத் துன்பமானது வந்து பொருந்துமென்று தெரிந்து அவ்விடத்தை விட்டும் நீங்கித்
தாங்களிருந்து வாழ்கின்ற வீட்டின்கண் வந்து சேர்ந்து எளிதில் அவர்களுக்குச் செம்மையாகும் வண்ணம்
ஓர் விருந்தளித்திட விரும்பித் தங்களது நாயகியா ரவர்களுக்குச் சொன்னார்கள்.
4414.
சிறிய மையொன்று வளர்ந்ததங் கிருந்ததத் திறலோர்
குறைவி லாதுற வறுத்திருங் கொழுந்தசை குறைத்து
நிறைய மாவுஞ்சே ரெட்டெனக் கொடுத்தவ ணீந்தி
யறிவு மானமுந் தயங்கிய முகம்மதை யடைந்தார்.
59
(இ-ள்) அவ்வாறு
சொல்லி அவர்களது வீட்டில் வளர்ந்த ஓர் சிறிய ஆடான திருந்தது. அதை வல்லமையையுடைய அச்சாபிர்
றலி யல்லாகு அன்கு அவர்கள் குறைவின்றிப் பொருந்தும் வண்ணம் அறுத்துச் செழுமையான பெரிய அதன்
மாமிசத்தைத் துண்டு துண்டாக வெட்டி மாவும் எட்டுச் சேரேன்று சொல்லும்படி நிறையக் கொடுத்து அவ்விடத்தை
விட்டுங் கடந்து ஞானமும் பெருமையும் பிரகாசியா நிற்கும் நாயகம் நபிகட் பெருமானார் நபி காத்திமுல்
அன்பியா முகம்மது முஸ்தபா செய்யிதுல் முறுசலீன் ஹபீபுறப்பில் ஆலமீன் றசூல் சல்லல்லாகு அலைகி
வசல்ல மவர்களிடத்தில் வந்து சேர்ந்தார்கள்.
4415.
தீயன் றோழரிற் சிறியவன் வறியவன் றெளியா
வாய னென்மனை யிடத்தினில் வழிமுறை திறம்பாத்
தூய வேந்தெனு நீவிரும் பஃதெனுந் தொகையி
னாய மன்னரும் விருந்துண்டு போகவென் றறைந்தார்.
60
(இ-ள்) அவ்வாறு வந்து
தீமையனும் தங்களது நேசர்களிற் சிறியேனும் தரித்திரனும் தெளியாத சொற்களை யுடையேனுமாகிய எனது
வீட்டின் கண் சன்மார்க்கத்தினது ஒழுங்கில் நின்றும் வேறுபடாத பரிசுத்தத்தைக் கொண்ட அரசென்று
சொல்லும் நீங்களும் பத்தென்று கூறுந் தொகைக்காகிய வேந்தர்களான அசுஹாபிமார்களும் வந்து
விருந்தருந்திப் போகுங்க ளென்று கூப்பிட்டார்கள்.
4416.
தீங்கி லாதவச் சாபிர்தஞ் செழுமுக நோக்கி
வாங்கு வெஞ்சிலை யவரொடு மியான்வரு மளவுந்
தாங்கு வெண்ணினத் தசையொடு நுவணையுஞ் சமையா
தாங்கு வைத்திரு மென்றன ரரசருக் கரசர்.
61
(இ-ள்) அவ்வாறு கூப்பிட,
மன்னர்க்கு மன்னரான நமது நாயகம் நபிகட் பெருமானார் நபி செய்யிதுனா செய்யிதுல்
|