பக்கம் எண் :

சீறாப்புராணம்

1608


இரண்டாம் பாகம்
 

     (இ-ள்) அவ்வாறு சொல்ல, அந்தச் சாபிர் றலியல்லாகு அன்கு அவர்கள் அந்த இறைச்சியையும் மாவையுங் கொண்டு வந்து அவர்களது சந்நிதானத்தில் அமையும் வண்ணம் வைத்தார்கள். உடனே ஒப்பற்ற சந்திரப் பிரகாசத்தைப் போன்ற ஒளிவையுடைய றசூலாகிய நமது நாயகம் நபிகட் பெருமானார் நபிகாத்திமுல் அன்பியா முகம்மது முஸ்தபா செய்யிதுல் முறுசலீன் ஹபீபுறப்பில் ஆலமீன் சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்கள் அவற்றைப் பார்த்துப் பிரகாசத்தைக் கொண்ட தங்கள் வாயினிடத்து உலவா நிற்கும் அருமையான உமிழ் நீரை அவற்றில் மொழிந்து பின்னர் சத்தியத்தை யுடைய அரசரான முசாபிறே! நீவிர் இதை விரும்பிச் சமையு மென்று கற்பித்தார்கள்.

 

4420. இருந்த பார்ப்புடற் றடியினை யரிதிற்கொண் டேகி

     மருந்தொ டுநறுங் கிருதமும் வாசமு மாட்டித்

     திருந்த வேமெரி மூட்டலும் பதலையிற் சிறப்ப

     வருந்தி லாதருங் கொதிதொறுங் கொதிதொறு மலிந்த.

65

     (இ-ள்) அவ்வாறு கற்பித்த, அவர்கள் அங்கிருந்த அந்த ஆட்டுக் குட்டியின் உடலினது மாமிசத்தை அரிதோடுங் கொண்டு சென்று மருந்துடன் மணத்தைப் பொருந்திய நெய்யையும் வாசனைத் திரவியங்களையும் அதனுடன் சேர்த்துச் செவ்வையாக வேகின்ற நெருப்பை மூட்டின வளவில் அது தாழியிற் சிறக்கும்படி வருந்தாது அருமையான கொதிக ளுண்டாகுந்தோறுந் தன்னளவில் நின்று மதிகப்பட்டது.

 

4421. வெண்ணி றந்தரு நுவணையுஞ் சுடச்சுட மேன்மே

     லெண்ணி லாதபே ரிலட்டுக மாயின விதனை

     நண்ணி வண்கரத் தெடுத்தனர் வைத்தனர் நலத்தி

     னுண்ணு நல்கலஞ் சாபிரென் றோதிய வுரவோர்.

66

     (இ-ள்) அவ்வாறு அது அதிகப்பட, வெள்ளிய நிறத்தைத் தரா நிற்கும் நுண்ணிய அந்த மாவும் சுடச்சுட அதிகமதிகம் கணக்கற்ற பெரிய உறட்டிகளாயின. இதைச் சாபிர் றலியல்லாகு அன்குவென்று சொல்லும் வீரரவர்கள் நெருங்கி அழகிய தங்கள் கையினா லெடுத்து நன்மையோடு முண்ணுகின்ற நல்ல பாத்திரத்தின்கண் வைத்தார்கள்.

 

4422. மொய்த்த மாந்தர்க ளியாவருந் தொகைதொகை முறையின்

     கைத்த லத்தெடுத் தருந்துமென் றினிதொடு கழறப்

     பத்தி பத்தியின் வேந்தருந் தருவொடு பகர்ந்த

     வித்த மக்குண நபியுமங் குணவுணச் சமைந்தார்.

67