பக்கம் எண் :

சீறாப்புராணம்

1610


இரண்டாம் பாகம்
 

      (இ-ள்) அவ்வா றதிகரிக்க, பாதாள லோகத்திலும் பூலோகத்திலும் வானலோகத்திலும் மிகுத்த ஆச்சரியமான துண்டாகும் வண்ணம் சத்தியத்தையுடைய அரசர்களாயிரம் பெயருடன் நீட்சியைக் கொண்ட கணக்கற்ற வல்லமையையுடைய மைந்தர்களாகிய அசுஹாபிமார்களும் றசூலென்று சொல்லும் தேவராதிபரான நமது நாயகம் நபிகட் பெருமானார் நபிகாத்திமுல் அன்பியா முகம்மது முஸ்தபா செய்யிதுல் முறுசலீன் ஹபீபுறப்பில் ஆலமீன் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களும் ஐம்புலன்களுஞ் சரீரமு மகிழ்வடைந்து அழகானது அதிகரிக்கும்படி அருந்தினார்கள்.

 

4426. சம்ப ரத்தினில் வாய்கரம் பூசிநற் சாந்தம்

     பம்ப மார்பினி லேற்றியங் கிருந்திடப் படியு

     மும்ப ரும்புகழ்ந் தேத்திய நபிகொறி புசித்த

     கொம்பு தொல்குளம் பென்பவை குவிமினென் றுரைத்தார்.

71

     (இ-ள்) அவ்வா றருந்தி நீரினால் வாயையுங் கைகளையுங் கழுவி நல்ல சந்தனத்தைப் பொலியும் வண்ணம் மார்பினிடத்துக் கொண்டு அவ்விடத்தில் தங்கியிருக்க, பூலோகமும் வானலோகமும் புகழ்ந்து துதிக்கா நிற்கும் நமது நாயகம் நபிகட் பெருமானார் நபிசெய்யிதுனா செய்யிதுல் முறுசலீன் ஹபீபுறப்பில் ஆலமீன் காத்திமுல் அன்பியா முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்கள் நாமருந்திய ஆட்டினது கொம்பு, தோல், எலும்பென்று சொல்லுகின்ற அவைகளைக் கொண்டு வந்து இங்கே குவியுங்களென்று சொன்னார்கள்.

 

4427. சுடுநெ ருப்பினில் வெந்தவென் பெவையுமுன் றுணித்து

     விடும ருப்பையுஞ் சிரத்தையுங் காலையும் விரிந்த

     வடக மற்றவு மெடுத்தனர் குவித்தனர் வாய்மைத்

     திடம டுத்ததீன் விளக்கிய முகம்மது திருமுன்.

72

     (இ-ள்) அவ்வாறு சொல்ல, சுடா நிற்கும் அக்கினியினால் வெந்த எல்லா எலும்புகளையும ஆதியில் வெட்டியெறிந்த கொம்புகளையும், தலையையும், கால்களையும், பரந்த தோல் முதலிய யாவையு மெடுத்துச் சொல்லினது உறுதியானது நெருங்கப் பெற்ற தீனுல் இஸ்லாமென்னும் மெய்ம்மார்க்கத்தை விளக்கஞ் செய்த நமது நாயகம் நபிகட் பெருமானார் நபிசெய்யிதுனா செய்யிதுல் குறைஷியா காத்திமுல் அன்பியா அஹ்மது முஜ்தபா முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களது தெய்வீகந் தங்கிய சந்நிதானத்தின் கண் குவித்தார்கள்.