இரண்டாம்
பாகம்
உயைவந்த படலம்
எழுசீர்க்கழி
நெடிலடியாசிரிய விருத்தம்
4439. சுற்றுள வேந்தர் பல்பெருங் குலத்திற்
றோன்றிய
வரசரு மவரோ
டுற்றவெம் படையும்
பனீக்குறை லாவென்
றோதிய
மாந்தருங் கபடம்
பற்றிய எகூதிக் குழுவின
ரவரும்
பரிவொடு
மக்கமா நகரிற்
றெற்றினர் வளைந்த
முகக்குசைப் பரியுஞ்
செறிந்திடத்
திரைக்கடல் சிவண.
1
(இ-ள்)
பக்கத்தில் வளைந்துள்ள அரசர்களும் பல பெரிய குலத்தி
லவதரித்த அரசர்களும் அவர்களோடு பொருந்திய வெவ்விய
சைனியங்களமு, பனீக்குறைலா வென்று சொல்லிய வீரர்களும்,
வஞ்சகத்தைப் பற்றிய எகூதிக் கூட்டத்தார்க ளாகிய
அவர்களும், வளைந்த முகத்தையும், புறமயிரை யுமுடைய
குதிரைகளும் நெருங்கும் வண்ணம் அலைகளையுடைய
சமுத்திரத்தை நிகர்ப்ப, அன்போடுந் திரு மக்கமா
நகரத்தின் கண் வந்து ஒருவரோ டொருவரறியாவண்ணம்
மாறுபட்டார்கள்.
4440. முறைமுறை யெழுந்த முரணுடைத் தானை
முகிறுளைத்
தண்டவான் முகடு
நிறைதர வெழுந்த
கதலிகைக் கான
நெடும்பதக் கவிகையு மெழுந்த
வறைதரு பல்வாச்
சியத்தொனி யெழுந்த
வவமொழி
வாய்மையு மெழுந்த
குறைவிலா தவனித் தூளியு
மெழுந்த
விசும்பொடு திசைகளுங் குலவ.
2
(இ-ள்)
அவ்வாறு மாறுபட்ட வலிமையை யுடைய சைனியங்கள் வரிசை
வரிசையாக எழும்பின. கொடிக்காடானது மேகத்தைத் துளைத்து
ஆகாயத்தினது உச்சியும் நிறையும்படி எழும்பிற்று. நீண்ட
கால்களையுடைய குடைகளு மெழும்பின. அடிக்கா நிற்கும் பல
வாச்சியங்களின் தொனிகளு மெழும்பின. வீண்
வார்த்தைகளாகிய வாய்மைகளு மெழும்பின. ஆகாயத்துடன்
எண்டிசைகளும் பிரகாசிக்கும்படி பூமியின்கண்ணுள்ள
தூசிகளுங் குறைவின்றி எழும்பின.
|