பக்கம் எண் :

சீறாப்புராணம்

1617


இரண்டாம் பாகம்
 

4443. செம்புணீ ராடிப் புலான்மணங் கமழுந்

         திறனுனைக் கடுத்தலை தாங்கிக்

     கும்பியில் வீழும் பனீக்குறை லாவென்

         றோதிய குழாத்தவர் நாளும்

     வெம்பிய சீற்றத் தெகூதிய ரவரும்

         வேண்டிய படைகொடு செறியத்

     தும்பையுஞ் சூடி யகுத்தபு பவத்திற்

         றோன்றிய குயையுமே கினனால்.

5

      (இ-ள) அன்றியும், அகுத்தபென்பவனது பாவத்தினால் இவ்வுலகத்தின் கண் அவதரிக்கப்பட குயையென்பவனும் செந்நிறத்தைக் கொண்ட இரத்தத்தில் ஸ்நாநஞ் செய்து தசையினது மணத்தைப் பரிமளியா நிற்கும் வலிமையைப் பெற்ற நுனியையுடைய வாளாயுதத்தைத் தரித்து நரக லோகத்திற் போய் விழுகின்ற பனீக்குறைலா வென்று சொல்லுங் கூட்டத்தவர்களும், பிரதி தினமும் வெம்புகின்ற கோபத்தையுடைய எகூதிகளும் வேண்டிய சைனியங்களைக் கொண்டு தன்னை நெருங்கிவரும் வண்ணம் தும்பைமாலையு மணிந்து சென்றான்.

 

4444. அடிபெயர்த் தாடுங் கவனவாம் பரியைந்

         தாயிரஞ் சூழ்தர அபஷிக்

     கடலெனுஞ் சேனை வேந்தர்க னானாத்

         தளத்தினர் கணிப்பிலர் செறிய

     மிடலுடைக் கவச முடலிடத் தணிந்து

         வெண்டலை மூளையிற் றோய்ந்த

     வடிசுடர்த் திகிரி தாங்கியிக் கிரிமா

         மன்னனு மேகினன் மாதோ.

6

     (இ-ள்) அன்றியும், இக்கிரிமாவென்று சொல்லும் அரசனும் பாதங்களைப் பெயர்த்து நடனஞ் செய்யா நிற்கும் நடையையுடைய தாவுகின்ற ஐயாயிரங் குதிரைகள் தன்னை வளைந்து வரவும், அபஷிகளாகிய சமுத்திரமென்று சொல்லுஞ் சைனியங்களது தலைவர்களும் கனானாவென்று சொல்லுஞ் சைனியத்தவர்களுங் கணக்கற்றவர்கள் நெருங்கி வரவும், வலிமையையுடைய அங்கியைச் சரீரத்தின் கண் பூண்டு தலையோட்டினது மூளையில் தோய்ந்த கூரிய பிரகாசத்தையுடைய சக்கராயுதத்தை யணிந்து சென்றான்.

 

4445. பண்ணமைப் பரியை யாயிர மலிய

         பற்பல தானையு மீண்ட

     வெண்ணருங் குறைசித் தலைவருந் துறும

         வெறிபடைக் கலனவை யேந்தி