இரண்டாம்
பாகம்
காலையுடைய வீசுகின்ற
கொடிகளும் ஒரு பக்கம், ஆகாயத்தின் கண் நெருங்கிய
கவிகைகள் ஒரு பக்கம், முழக்கத்தினாற் பொலிந்த பல
வாச்சியங்களும் ஒரு பக்கம், உலாவுகின்ற கவரிகளும் ஒரு
பக்கம், தூசிகளும் ஒரு பக்கமென்று சொல்லும் வண்ணந்
தெரியாமல் நெருங்கிற்று.
4450. ஆறுபட் டெழுந்த கழனியுங் காவு
மடிக்கடி
சேறலிற் றிடரு
நீறுபட் டெழுந்த பாய்பரி
வாயின்
விலாழிநீர் நீத்தத்தி னனைந்து
சேறுபட் டெழுந்த மலைமதி
னெடும்பார்
செங்கதிர்ப் பருதிவெய் யவனும்
வேறுபட் டெழுந்தான்
பூமியி னடைந்து
மேகமு
நீர்வறந் தனவால்.
12
(இ-ள்)
அவ்வாறு நெருங்கி அடிக்கடிச் செல்லுதலினால்
விளைநிலங்களுஞ் சோலைகளும் வழிகளாயோங்கின.
திடர்களும் நீறாயெழும்பின. பாயா நிற்குங் குதிரைகளின்
வாயினிடத் துண்டான நுரையினது நீராகிய வெள்ளத்தில்
மலைகளும் மதில்களும் நீண்ட இந்தப் பூமியும் நனைந்து
சேறாயோங்கின. சிவந்த கிரணங்களையும் வட்ட
வடிவையுமுடைய சூரியனும் வேறா யெழும்பினான். மேகங்களும்
பிமியின் கண் வந்து சேர்ந்து நீரின்றி வறழ்ந்தன.
4451. கோடின புருவ நிமிர்ந்தன புயங்கள்
வாவுறக்
கொலைசெயு நெடும்போர்
தேடின மனங்கள் சிவந்தன
விழிகள்
செறிந்தன
மயிர்ப்புள கியாவு
மோடின பெருமூச் சடைந்தன
விதழ்வா
யொளிவிரன் முறுக்கின கரங்க
ணீடிய மூரித்
திறத்தொடும் பிறந்து
குபிர்நிலை நின்றமன் னவர்க்கே.
13
(இ-ள்)
அவ்வாறு வழற, பெருமை பொருந்திய வலிமையோடும்
இவ்வுலகத்தின் கண் அவதரித்துக் குபிர் மார்க்கத்தில்
நின்ற அரசர்களாகிய அந்தக் காபிர்களுக்குப் புருவங்கள்
வளைந்தன. தோள்களோங்கின. மனங்கள் கொலைத்தொழிற்
செய்கின்ற நெடிய யுத்தத்தை வாவும்படித் தேடின. கண்கள்
செந்நிறமடைந்தன. மயிர்களெல்லாம் புனகிதத்தால்
ஒன்றோடொன்று நெருங்கின. நெடுமூச்சுகள் விரைந்து
சென்றன. உதடுகள் வாயைச் சேர்ந்தன. பிரகாசத்தையுடைய
விரல்கள் ஒன்றோ டொன்றைத் திருக்கின. கைகள்
நீண்டன.
|