பக்கம் எண் :

சீறாப்புராணம்

1622


இரண்டாம் பாகம்
 

4454. செந்தழல் வெதும்பிச் சீறிய சீற்ற

         வெம்மையெ கூதிக டினமும்

     புந்தியி னுணர்வு மாறிய பொய்மை

         பனீக்குறை லாவெனப் புகன்ற

     வெந்திற லவரு மிருபுறஞ் சூழ

         வோர்புறத் திறங்கினன் விளைந்த

     தந்திரத் தமைந்த அகுத்தபு மகிழ்ந்த

         சந்ததி குயையெனுங் கொடியோன்.

16

     (இ-ள்) அவர்கள் அவ்வாறடிக்க, முதிர்ந்த உபாயத்தினா லமையப்பட்ட அகுத்தபென்பவன் சந்தோஷித்துப் பெற்ற புதல்வனாகிய குயையென்று சொல்லுங் குரூரன் சிவந்த நெருப்பைப் போலும் வெதும்பிச் சீறுகின்ற கோபமாகிய சூட்டையுடைய எகூதிகளும் பிரதிதினமும் இதயத்தினிடத்து அறிவானது மாறப்பெற்ற அசத்தியத்தை யுடைய பனீக்குறைலாவென்று சொல்லும் வெவ்விய வல்லமையுடையவர்களும் இரண்டு பக்கத்திலுந் தன்னை வளையும் வண்ணம் ஒரு பக்கத்தி லிறங்கினான்.

 

4455. குறைசியங் குழுவு மளவில்க னானாக்

         கூட்டமு மபசிவெம் படையு

     மிறுதியில் வேகத் துரகதம் பதினா

         யிரமுமீண் டிடவரை கிடந்த

     திறலரி யேய்ந்த இக்கிரி மாவுந்

         தீரன பாசுபி யானு

     முறையொடும் றூமா வென்னுமத் தலத்தி

         லிறங்கினர் முனைப்பதி யமைத்தார்.

17

     (இ-ள்) அவன் அவ்வாறிறங்க, மலைகளின் குகைகளிற் கிடக்கின்ற வலிமையுடைய சிங்கத்தை நிகர்த்த இக்கிரிமா வென்பவனுந் திண்ணியனாகிய அபாசுபியா னென்பவனும், அழகிய குறைஷிக் கூட்டத்தார்களுங் கணக்கற்ற கனானாக் கூட்டத்தார்களும் வெவ்விய அபஷிக் கூட்டத்தார்களும் முடிவற்ற வேகத்தையுடைய பதினாயிரங் குதிரைகளுந் தங்களை வந்து நெருங்கும் வண்ணம் ஒழுங்குடன் றூமாவென்று சொல்லும் அந்தத் தானத்தி லிறங்கிப் பாடி வீடுஞ் செய்தார்கள்.

 

4456. உடும்பினை யழைத்து மறைமொழி யதனா

         லுலகிரு ளகற்றிய நபியும்

     விடம்புகு படைக டாங்கிய தரும

         வேந்தர்மூ வாயிரர் குழுவு