பக்கம் எண் :

சீறாப்புராணம்

1623


இரண்டாம் பாகம்
 

     முடந்தரு முகப்பாய் பரிபல மலிய

         மொய்க்கின்ற வானவர் வாழ்த்தத்

     தடம்பயி னகரச் சுற்றினு மோம்பி

         யிருந்தனர் தனியவ னருளால்.

18

     (இ-ள்) அவர்கள் அவ்வாறு செய்ய, உடும்பை வரவழைத்தும் அது சொல்லிய வார்த்தைகளினால் இந்தப் பூமியினிடத்துள்ள அஞ்ஞானமென்னு மந்தகாரத்தை இல்லாமற் செய்த நமது நாயகம் நபிகட் பெருமானார் நபி செய்யிதுனா செய்யிதுல் முறுசலீன் ஹபீபு றப்பில் ஆலமீன் காத்திமுல் அன்பியா முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்களும், விடமானது புகப்பெற்ற ஆயுதங்களைச் சுமந்த புண்ணியத்தையுடைய அரசர்களான முவ்வாயிரம் அசுஹாபிமார்களது கூட்டமும், ஏகனான அல்லாஜல்ல ஜலாலகுவத்த ஆலாவின் காருண்ணியத்தினால் வளைவைத்தரும் முகத்தையுடைய தாவிச் செல்லுகின்ற பல குதிரைகள் நிறையவும், நெருங்கிய தேவர்களான மலாயிக்கத்துமார்கள் துதிக்கவும், பெருமையாற் பழகிய அந்தத் திருமதீனமாநகரத்தினது நாற்புறத்திலுங் காத்துக் கொண்டிருந்தார்கள்.

 

4457. நெற்றியுங் கருமை யெய்திட வணங்கு

         நீர்மைய ரெதிரின்வந் தமரி

     னுற்றன ரிலரென் றடங்கிலாச் சீற்ற

         மோங்கிடக் குபிரவ ரெல்லாஞ்

     சுற்றுள நகருங் கொள்ளைகொண் டுவந்தார்

         தொடர்படு குளிர்நிழற் காவு

     மிற்றுற முறித்தங் கெரித்தன ரொன்றோ

         வினையன விடர்பல விளைத்தார்.

19

     (இ-ள்) அவர்களவ்வாறிருக்க, அந்தக் காபிர்க ளனைவரும் நெற்றியுங் கருநிறத்தை யடையும் வண்ணம் தொழுகின்ற குணத்தையுடையவர்களான முஸ்லிங்கள் நமக்கு எதிராக வந்து யுத்தத்திற் பொருந்தினார்க ளில்லரென்று அமையாத கோபமானது அதிகரிக்க, அந்தத் திருமதீனமாநகரத்தின் சுற்றிலுமுள்ள நகரங்களையுஞ் சூறையாடி மகிழ்ந்தார்கள். வரிசையாகவுடைய குளிர்ந்த நிழலைக் கொண்ட சோலைகளையும் இற்றுப் போகும்படி யொடித்து எரித்தார்கள். அங்கே அவர்கள் செய்தது ஓன்றா? அல்ல. இத்தன்மையான பல துன்பங்களைச் செய்தார்கள்.

 

4458. நெல்லொடு சாமை வரகுசெந் தினையு

         நீண்டகோ தும்பையு மிறுங்கு

     மெல்லையி லீத்தங் கனியுமுந் திரிகைக்

         கனியுமற் றுளபொரு ளெவையுஞ்