இரண்டாம்
பாகம்
செல்லலின் றென்னத்
தாரைக ளனைத்துந்
திகையுறக் காத்தன ரதனா
லல்லலுற் றழுங்கன்
மதீனமா நகரச்
சுற்றினு மானது மாதோ.
20
(இ-ள்)
அன்றியும், அவர்கள் நெல்லுடன் சாமையையும் வரகையும்
செந்நிறத்தைக் கொண்ட தினையையும் நீட்சியையுடைய
கோதுமையையும் சோளனையும் அளவற்ற ஈத்தம்பழங்களையும்,
முந்திரிகைப்பழங்களையும் வேறுள்ள பண்டங்க
ளெல்லாவற்றையும் அங்குச் செல்லுதலில்லையென்று
சொல்லும் வண்ணம் மயக்குமுறும்படி வழிகளெல்லாவற்றிலுங்
காவல் செய்தார்கள். அதனால் அந்தத் திரு மதீனமா
நகரத்தினது சுற்றிலும் முடைதலுற்று அழலாயின.
4459. எவ்வழி
யிடத்து முரணுறுங் காபி
ரிவுளியுஞ்
சேனையு மீண்டப்
பவ்வமொத் தகரஞ் சூழ்தர
விருப்பப்
பான்மதிக் கதிர்முகம் மதுநற்
செவ்விய வுணர்வு ஞானமு
நாளுந்
தெருண்டவர் மஆதுதன் வரத்திற்
குவ்வினி லுதித்த சகுதினை
யழைத்துச்
சிலமொழி
கூறுவ ரன்றே.
21
(இ-ள்)
அவ்வாறு விரோதத்தைப் பொருந்திய அந்தக் காபிர்களது
குதிரைகளும் சைனியங்களும் வழிகளின் எவ்விடங்களிலுஞ்
செறியவும், சமுத்திரத்தை நிகர்த்து அவ்வூரைச் சூழும்
வண்ணம் இருக்கவும் வெள்ளிய சந்திரனது பிரகாசத்தைப்
போன்ற பிரகாசத்தையுடை நமது நாயகம் நபிகட்
பெருமானார் நபி செய்யிதுனா செய்யிதுல் குறைஷிய்யா
காத்திமுல் அன்பியா அஹ்மது முஜ்தபா முகம்மது முஸ்தபா
றசூல் சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்கள் பிரதி தினமும்
நல்ல உணர்வையும் ஞானத்தையுந் தெளிந்தவர்களான மஆது
என்பவரது வரத்தினால் இவ்வுலகத்தின் கண் அவதரித்த
சகுது றலியல்லாகு அன்கு அவர்களைக் கூப்பிட்டுச் சில
வார்த்தைகளைச் சொல்லுவார்கள்.
4460. நஞ்செனுங்
கொடிய குபிரொடுங் கூண்ட
நட்பில
வெனத்திட வாய்மை
யின்சொலி னுவந்த
கொடும்பனீக் குறைலா
வெனுமற
மாந்தர்க ளிதமில்
வஞ்சகம் பயின்ற
குயையொடு கூடி
யுறுதியை
மறுத்தன ராம்போ
யெஞ்சலில் புகழோய்
நன்கவை யறிந்து
திடத்தொடு மிவண்வர வேண்டும்.
22
|