இரண்டாம்
பாகம்
(இ-ள்) குறையாத கீர்த்தியையுடைய சகுதே!
விடமென்று சொல்லா நிற்குங் கொடுமையையுடைய
காபிர்களோடுஞ் சேர்ந்த நேசமானது இல்லையென்று சத்திய
வாசகத்தையுடைய எனது வார்த்தைகளில் விருப்பமுற்ற கொடிய
பனீக்குறைலாவென்று சொல்லும் பாவத்தையுடைய ஆடவர்கள்
இனிமையில்லாத வஞ்சகத்தைக் கற்ற குயையென்பவனோடு
சேர்ந்து முன்சொன்ன உறுதிப்பாட்டை
நிராகரித்தார்களாம். ஆதலால் நீவிர் சென்று
அச்சமாச்சாரத்தை நன்றாகத் தெரிந்து கொண்டு
வலிமையோடும் இங்கு வருதல் வேண்டும்.
4461. பத்தியி
னமைந்து நம்மொடும் பகர்ந்த
பண்பொடு
மாங்குவை கினரா
லுத்தர மெவர்க்குந்
தெரிதர வென்னோ
டுரைத்தருள் குயையொடு முடன்று
சத்திய வாய்மை மறுத்தன
ரென்னில்
தீனவர்
சலிப்புறா வண்ண
முத்தம மறையி
னிகழ்த்தென வுரைத்தா
ருளமகிழ்ந் தவரும்போ யினரால்.
23
(இ-ள்)
அன்றியும், அவர்கள் விசுவாசத்தோடும் பொருந்தி
நம்முடன் சொல்லிய பண்போடும் அங்கே
தங்கியிருப்பார்களானால் அந்த மறுமொழியை
எல்லாருக்குந் தெரியும்படி நீவிர் என்னுடன் சொல்லும்.
குயையென்பவனோடும் நம்மீது விரோதங் கொண்டு அவர்கள்
முன் சொல்லிய உண்மை வாசகத்தை
நிராகரித்தார்களேயானால் அச்சமாச்சாரத்தைத் தீனுல்
இஸ்லாமென்னும் மெய்ம்மார்க்கத்தையுடைய
அசுஹாபிமார்கள் சலிப்படையாத விதத்தில் மேன்மையைக்
கொண்ட இரகசியமாக என்னிடத்தில் மாத்திரம்
சொல்லுமென்று சொன்னார்கள். அந்தச் சகுது றலியல்லாகு
அன்கு அவர்களும் உடனே தங்களிதயமானது களிக்கப் பெற்று
அவ்விடத்தை விட்டுஞ் சென்றார்கள்.
4462. அறபியங்
காபிர் அசத்தெனு மாந்தர்
அபசிமன்
னவர்கள்க னானாத்
திறமையர் கத்பான்
குழுவின ரிருந்த
பாசறை
தெரிவுற நோக்கித்
துறுமிய கபடம் புணர்பனீக்
குறைலாச்
சூதர்க
ளுறைந்தவை வினவ
வுறுதியில் லவரா
யிருந்தனர் நரகத்
துட்புகுந்
தொளித்திடு முணர்வால்.
24
(இ-ள்)
அவ்வாறு சென்று அறபிக் காபிர்களும், அசதென்று சொல்லும்
ஆடவர்களும், ஹபஷிவேந்தர்களும், கனானா
|