பக்கம் எண் :

சீறாப்புராணம்

1626


இரண்டாம் பாகம்
 

வீரர்களும், கத்துபான் கூட்டத்தார்களும் தங்கிய கூடாரங்களைத் தெரியும்படி பார்த்துத் திரண்ட வஞ்சகமானது சாரப் பெற்ற பனீக்குறைலாவாகிய சூதர்களிருந்து அச்சமாச்சாரங்களைக் கேட்க, அவர்கள் நரகலோகத்தின் கண் புகுந்து மறைகின்ற புத்தியினால் உறுதியற்றவர்களாக இருந்தார்கள்.

 

4463. ஆங்கவர் திறமுங் கேளிரு நிதியு

         மழிதரத் தூடணித் திறையோன்

     பாங்கினி லிரந்து முனைப்பதி நீந்திப்

         பயகாம்ப ரிடத்தினி லணுகித்

     தீங்குறும் வார்த்தை யீதென மறையிற்

         செப்பின ரறத்தொடும் புகழு

     மோங்கிய தவமும் பதவியும் பேறு

         மொழுக்கமு நிறைந்திட வுயர்ந்தோர்.

25

     (இ-ள்) புண்ணியத்துடன் கீர்த்தியும் அதிகரித்த தவமும் பதவியும் பேறும் சன்மார்க்கமும் நிறையும் வண்ண முயர்ந்தவர்களான அந்தச் சகுது றலியல்லாகு அன்கு அவர்கள் அங்கே அவ்வாறிருந்த அந்தப் பனீக்குறைலா வென்பவர்களது வல்லமையுஞ் சுற்றமும் பெரிய திரவியமும் அழியும்படி நிந்தித்து யாவருக்கும் இறைவனான அல்லாகு சுபுகானகுவத்த ஆலாவினிடத்தி லிரந்து அந்தப் பாசறை விட்டுங் கடந்து பயகாம்பரான நமது நாயகம் நபிகட் பெருமானார் நபிசெய்யிதுனா செய்யிதுல் முறுசலீன் ஹபீபு றப்பில் ஆலமீன் காத்திமுல் அன்பியா முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகி வசல்லமவர்களிடத்தில் வந்து தீமையைப் பொருந்திய சமாச்சாரமானது இதுவென்று இரகசியமாகச் சொன்னார்கள்.

 

4464. தப்பிய வாய்மை கேட்டுளம் வெகுண்டு

         தரியல ரொருப்படக் கூறு

     மொப்பினை முறிக்க வேண்டுமென் றுன்னிச்

         சான்றவ ரொருவரைக் கூவி

     யிப்படி விளங்கு கீர்த்தியீ ரென்ன

         விதமுறப் போற்றியங் கிருத்தி

     முப்புவி யவர்க்குந் தூதென வாய்ந்த

         முகம்மதாங் கினையன வுரைப்பார்.

26

      (இ-ள்) அந்தப் பனீக்குறைலாக்கள் அவ்வாறு தவறிய சமாச்சாரத்தை வானம், பூமி, பாதாள மென்னும் முவ்வுலகங்களி லுள்ளவர்களுக்கும் றசூலென்று சொல்லும்படி சிறந்த நமது நாயகம் நபிகட் பெருமானார் நபி செய்யிதுனா செய்யிதுல் குறைஷிய்யா காத்திமுல் அன்பியா அஹ்மது முஜ்தபா முகம்மது