இரண்டாம்
பாகம்
முஸ்தபா சல்லல்லாகு அலைகி
வசல்ல மவர்கள் கேள்வியுற்று மனமானது கோபிக்கப்
பெற்றுச் சத்துராதிகளாகிய அந்தக் காபிர்கள்
அவ்விதம் ஒருமனப்படும் வண்ணங் கூறிய ஒப்பை முறிக்க
வேண்டுமென்று நினைத்து அறிஞரான ஒரு அசுஹாபியைக்
கூப்பிட்டு அங்கே யிருக்கும்படி செய்து இப்பூமியின் கண்
விளங்கா நிற்கும் புகழையுடையவரே! என்று சொல்லி
இனிமையுறும்படி துதித்து அவ்விடத்தில் இத்தன்மையான
சமாச்சாரத்தைச் சொல்லுவார்கள்.
4465. கவையுறு கருத்தி லுவந்தவெங் காபிர்
காட்டிய
பாசறை யிடத்தி
லவுபெனு மரசு முயையினா
வென்னு
மண்ணலு
மிருந்தன ராங்கு
பவமொடு படிறும் வெகுளியுந்
துடைத்துப்
பதவியி
னடைந்தமெய்ப் புகழோ
யிவுளியஞ் சேனை மருவல
ரறியா
தினையவர்
மருங்கினி லேகி.
27
(இ-ள்)
பாவத்துடன் வஞ்சகத்தையும் கோபத்தையுமில்லாமற்
செய்து பதவியிற் சேர்ந்த உண்மையான கீர்த்தியையுடைய
அசுஹாபியே! நீவிர் பிளப்பைப் பொருந்திய
எண்ணங்களால் மகிழ்ச்சியடைந்த வெவ்விய காபிர்கள்
காட்டிய பாசறையின் கண் அவுபென்று சொல்லும் வேந்தனும்
உயையினாவென்று சொல்லும் மன்னவனு மிருக்கின்றார்கள்.
அங்கே குதிரைகளையும் அழகிய சைனியங்களையுமுடைய
சத்துராதிகளாகிய காபிர்களறியாதபடி இவர்களது
பக்கத்திற்போய்.
4466. குறைசியங் காபிர் கணத்தையு நீங்கிக்
கூறிய
வாய்மையு மறுத்துத்
திறனொடு மன்னோர்
போர்த்தொழி லொழிந்தோர்
திசையினி
லுறைந்தன ரென்னில்
விறல்புரி மதீனா தருபல
பலனில்
வேண்டுமுப்
பகுப்பிலோர் பாக
நிறைதர நாளு மருள்குவோ
மென்ன
நிகழ்த்துமென் றுரைத்தன ரன்றே.
28
(இ-ள்)
அவர்கள் வலிமையோடும் அழகிய குறைஷிக்காபிர்களது
கூட்டத்தையும் விட்டு அகன்று அவர்களுக்குச் சொன்ன உறுதி
வாக்கியத்தையும் நிராகரித்து யுத்தத்தொழிலைத்
தவிர்த்து ஒரு திக்கிற் போய்த் தங்குவார்க ளென்றாற்
பெருமை பொருந்திய இந்தத் திரு மதீனமாநகரமானது
தருகின்ற பலவகைப் பலன்களில் வேண்டா நிற்கும் மூன்று
|