இரண்டாம்
பாகம்
பாகத்தில் ஓர் பாகத்தை
நிறையும்படிப் பிரதி தினமும் உங்களுக்குத் தருவோமென்று
சொல்லுமென்று சொன்னார்கள்.
4467. நன்றென
வுவந்து முடிசிரந் துளக்கி
நாயகக்
குரிசிலை வாழ்த்தி
மின்றட வாட்கை
யிடத்தினிற் றாங்கி
யரியென
விரைவினி லேகிப்
பொற்றொடைத் திரடோ
ளன்னமன் னவர்முன்
புகன்றவை
யிவையெனப் புகன்றா
ரொன்றிய குணத்தி
னன்கெனக் கூறு
மிருவரு
முளத்திடை மதித்தார்.
29
(இ-ள்)
அவ்வாறு சொல்ல, அவர்கள் நல்லதென்று சொல்லி
மகிழ்ச்சியடைந்து கிரீடமணிந்த தலையையசைத்து
எப்பொருட்கும் நாயகத் தன்மையைக் கொண்ட இறைவரான
நபிகட் பெருமானார் நபிஹாமிது அஹ்மது மஹ்மூது முகம்மது
முஸ்தபா காத்திமுல் அன்பியா றசூல் சல்லல்லாகு அலைகி
வசல்ல மவர்களைத் துதித்துப் பிரகாசத்தைக் கொண்ட
பெரிய வாளாயுதத்தைக் கையின் கண் தாங்கிச்
சிங்கத்தைப் போலும் வேகமாய்ச் சென்று பொன்னினாற்
செய்யப்பட்ட மாலையைத் தரித்த திரண்ட புயங்களையுடைய
அந்த அரசர்களது முன்னர் நாயகம் நபிகட்
பெருமானாரவர்கள் கூறிய சமாச்சாரமானவை இவையென்று
சொன்னார்கள். அதற்குப் புகழா நிற்கும் அவர்களிருவரும்
பொருந்திய குணத்தோடும் நல்லதென்று சொல்லி
அவ்வார்த்தைகளை மனத்தின் கண் மதித்தார்கள்.
4468. அனையவ
ரிடத்தி னடந்தவை யனைத்து
மடைந்தவர் சாற்றிய பின்னர்
தினையள வெனினு மிறையவ
னேவல்
சிதைவிலா
தியற்றுநன் னயினார்
இனையன வார்த்தை மதீனமா
நகரத்
தலைமையின்
சகுதிரு வருக்கு
நனிதர வுரைத்திட் டீகுவ
மென்ன
நலனொடும்
வரவழைத் தனரால்.
30
(இ-ள்) அவ்வாறு மதிக்க, அவர்களிடத்தில்
நிகழ்ந்த சமாச்சாரங்களெல்லாவற்றையும் அங்குச்
சென்ற அந்த அசுஹாபியானவர் வந்து சொல்லிய பின்னர்த்
தினைப் பிரமாணமெனினும் யாவர்க்கும் இறைவனான ஹக்கு
சுபுகானகுவத்த ஆலாவின் ஏவலைச் சிதைவின்றிச்
சென்கின்ற நமது நாயகம் நபிகட் பெருமானார்
நபிசெய்யிதுனா செய்யிதுல் முறுசலீன் ஹபீபு றப்பில்
ஆலமீன் காத்திமுல் அன்பியா முகம்மது
|