இரண்டாம்
பாகம்
முஸ்தபா றசூல் சல்லல்லாகு
அலைகிவசல்ல மவர்கள் இத்தன்மையான சமாச்சாரத்தைப்
பெருமை பொருந்தும் வண்ணம் திருமதீனமா நகரத்தின்
தலைமைத்தனத்தையுடைய சகுது றலியல்லாகு அன்கு என்னும்
பெயரைக் கொண்ட இருவர்களுக்கும் சொல்லி அப்பாற்
கொடுப்போமென்று நன்மையோடும் அவர்களைக்
கூப்பிட்டார்கள்.
4469. வித்தகர்
திரளன் சாரியர்க் குவந்த
வேந்தர்வெண் புகழினிற் றிரண்ட
சித்திரத் தமைந்த
வடிவினர் வீயாத்
திடத்தினர் மஆதுகண் மணியாம்
புத்திரர் சகுதுங் கூறும்
உபாதா
புதல்வராஞ் சகுதும்வந் திருப்ப
நித்திய வரம்பெற்
றுயர்ந்தநன் னபியு
நிகழ்ந்தவை யனைத்தையு முரைத்தார்.
31
(இ-ள்)
அவ்வாறு அழைக்க, அறிஞரும் கூட்டமாகிய அன்சாரீன்களுக்கு
உவப்பான மன்னவரும் வெள்ளிய கீர்த்தியினால்
திரட்சியுற்ற ஓவியம்போலும் அமைந்த வடிவினரும் கெடாத
வலிமையையுடையவருமான மஆதென்பவரது கண்மணியாகிய
புதல்வர் சகுது றலியல்லாகு அன்கு அவர்களும், புகழா
நிற்கும் உபாதா வென்பவரது புத்திரரான சகுது றலியல்லாகு
அன்கு அவர்களும் வந்து இருக்க, அழியாத வரத்தைப் பெற்று
ஓங்கிய நமது நாயகம் நபிகட் பெருமானார் நபிசெய்யிதுனா
செய்யிது அஹ்மது முஜ்தபா முகம்மது முஸ்தபா றசூல்
சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்களும் நடந்த
சமாச்சாரங்க ளெல்லாவற்றையுங் கூறினார்கள்.
4470. இருவரு
மதனைக் கேட்டுளம் புழுங்கி
யிணைத்துளை நாசியி னுயிர்த்துப்
பொருவரா தெழுந்த
கபீபினை நோக்கிப்
புண்ணியத்
துறையினி லுறைந்த
பெரியவன் செயலோ
வன்றிநீர் நினைந்து
பேசிய
மாற்றமோ வருமிக்
கருமமே தென்னக்
கேட்டனர் நபியுங்
கழறின
னியானென வுரைத்தார்.
32
(இ-ள்)
அவ்வாறு கூற, அந்தச் சகுதென்பவர்க ளிருவர்களும் அந்தச்
சமாச்சாரத்தைக் கேள்வியுற்று மனமானது புழுங்கப் பெற்று
மூக்கினது இருதுவாரங்களாலும் பெருமூச்சு விட்டு
ஒப்பின்றியெழும்பிய ஹபீபென்னுங் காரணப் பெயரையுடைய
அந்நாயகம் நபிகட் பெருமானார் நபிசெய்யிதுனா செய்யிது
|