பக்கம் எண் :

சீறாப்புராணம்

163


முதற்பாகம்
 

பிரகாசித்த மாட்சிமையும் பொறுமையும் விளங்கவும், குற்றமில்லாத பெரிய கீர்த்தி விளங்கவும், உலகத்தின்கண் உயர்வான அதிசயங்களினது காரணங்கள் விளங்கவும், முன்னுள்ள மூன்று வேதங்களிலும் மேன்மை தரா நிற்கும் புறுகானுல் அலீமென்னும் வேதம் விளங்கவும், விரிந்த பிரகாசத்தையுடைய முகமாகிய சந்திரன் விளங்கவும், நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களின் சொல்லானது விளங்கினது.

 

     378. விண்ணகத் தமரர் மனமகிழ் வளர

             வியனுறும் வரிசைகள் வளரக்

        கண்ணகத் துறைந்து கருணையும் வளரக்

             கவினிறை பிறையென வளர

        வெண்ணரும் புதுமைக் காரணம் வளர

             விறையவன் றிருவருள் வளர

        மண்ணகத் திருந்து கிளையெலாம் வளர

             முகம்மது நபிவளர்ந் தனரே.

88

     (இ-ள்) அன்றியும், ஆகாயத்தின்கண் வாசஞ் செய்யா நிற்கும் தேவர்களான மலக்குகளின் மனமகிழ்ச்சி வளரவும், அற்புதம் பொருந்திய வரிசைகள் வளரவும், கண்ணினுள் தங்கி கிருபையும் வளரவும், அழகானது பூரண சந்திரனைப் போல் நாளுக்கு நாள் வளரவும், நினைத்தற்கரிய அதிசயத்தினது காரணங்கள் வளரவும், இறைவனான அல்லாகுசுபுகானகுவத்த ஆலாவின் அழகிய கருணை வளரவும், பூமியின் கண்ணிருந்து குடும்பங்களனைத்தும் வளரவும் நபிமுகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்லமவர்கள் வளர்ந்தார்கள்.

 

     379. பாரினிற் பரந்த குபிர்க்குல மறுத்துப்

             படர்தரு தீன்பயிர் விளக்கச்

        சீருறுங் கனக மாமழை பொழியத்

             திரண்டெழுஞ் செழுமுகிற் குலம்போற்

        பேர்தருங் குறைசிக் குலத்தினி லுதித்துப்

             பிறங்கொளி முகம்மது நபிக்கு

        வார்பொரு முலையார் மனங்களித் துவப்ப

             வருடமு மிரண்டுசென் றனவே.

89

     (இ-ள்) அப்போது இவ்வுலகத்தின்கண் பரவிய காபிரீன்களது கூட்டத்தைக் கருவறுத்து விரியா நிற்கும் தீனுல் இஸ்லாமென்னும் பயிரை விளக்குவதற்கு சிறப்புப் பொருந்திய பொன்னாலான பெருமை தங்கிய மழையைப் பெய்யத் திரண்டெழும்பும் செழுமையான மேகக் கூட்டங்களைப் போலக் கீர்த்தியைத்தரா நின்ற குரைஷியென்று சொல்லுங் கூட்டத்திலுற் பவித்துப்