இரண்டாம்
பாகம்
(இ-ள்) அவர்கள் மதித்துச் சொல்லிய
இத்தன்மையான வாசகத்தை மஆதென்பவர் தந்த சகுது
றலியல்லாகு அன்கு அவர்களோடு சகுது றலியல்லாகு அன்கு
அவர்களும் இதயத்தின் கண் பொறுத்துக் கலங்கி நல்ல
மனத்தோடு அறிவையும் நிராகரித்துப் பதிற்சொல்லுவது
யாது? ஒன்றுமில்லை யென்று சுழன்று புண்ணியத்தினது
மார்க்கத்திலுண்டான பெரிய பிரகாசத்தையுடைய
இரத்தினமானவர்களே! யாவற்றிற்கும் முதன்மையனான
அல்லாகு சுபுகானகுவத்த ஆலாவின் அருளினால் திரட்சியுற்ற
வலிமையையுடைய ஒப்பற்ற பயனானவர்களே! எங்களது
நேத்திரங்களை விட்டும் நீங்காத செல்வமானவர்களே!
என்று சொல்லிப் புகழ்ந்து பதிற் சொல்லுவார்கள்.
4473. இயாங்களுங்
கத்பான் குலத்தவ ரவரு
மென்றுமோர் மார்க்கமா யிருந்துந்
தேங்கம ழீந்தின்
கனியினொன் றேனுங்
கொடுத்திலம் பயத்தொடுந் திருந்த
வாங்கிய விலைக்கும்
விருந்தெனு மதற்கு
மன்றியோர் வரம்பிலா வருளே
தாங்கிய தவத்தின்
மேலுளீர் சமயஞ்
சலிப்புற
யாதினைக் கொடுப்போம்.
35
(இ-ள்)
ஒப்பற்ற எல்லையில்லாத அருளைப் பொறுத்த தவத்தின்
மீதுள்ள நபிகட் பெருமானே! நாங்களும் கத்துபான்
கூட்டத்தார்களும் எந்தக் காலமும் ஒரே மார்க்கத்தை
யுடையவர்களாயிருந்தும் அவர்களுக்குச் செவ்வையாக
வாங்கிய கிரயத்திற்கும் விருந்தென்று சொல்லு
மதற்குமல்லாமல் அச்சத்தோடும் வாசனை பரிமளிக்கின்ற
ஈத்தமரத்தினது பழங்களில் ஒன்றாவது கொடுத்திலோம்.
அவ்வாறிருக்க, நமது மார்க்கமானது சலிப்பைப்
பொருந்தும் வண்ணம் யாங்கள் எதைக் கொடுப்போம்.
கொடுப்பதொன்றுமில்லை.
4474. தருமமுந்
தவமுந் துயருறும் வீரத்
தகைமையு
மயருறும் விசயம்
வெருவுறு மானந் தேய்வுறுந்
தீமை
விளைவுறுந்
துனிவுறும் வேதம்
பெருகிய கீர்த்தி
நொய்துறுஞ் சமயம்
பிழைவுறு
மழகுறு நீதி
யிரிவுறும் போரிற்
றிரண்டெழுங் காபிர்க்
கிதமுற
வீந்திடி லெமக்கே.
36
|