இரண்டாம்
பாகம்
(இ-ள்) யுத்தத்திற்காக ஒன்று சேர்ந்து
எழும்பி வந்திருக்கின்ற இந்தக் காபிர்களுக்கு அவ்வாறு
இனிமை பொருந்தும் வண்ணங் கொடுத்தால் எங்களது
புண்ணியமுந் தவமுந் துன்பமடையும். வீரத்தினது தகுதியும்
தளர்வடையும் வெற்றியானது அச்சமடையும். அபிமானந்
தேய்வடையும். தீமையானது உண்டாகும். துன்பம் வந்து சேரும்.
புறுக்கானுல் கரீமென்னும் வேதமும் ஓங்கிய புகழும்
மெலிவடையும். நமது தீனுல் இஸ்லாமென்னும் மெய்ம்
மார்க்கங் களங்கமடையும் அழகு பொருந்திய நியாயமானது
கேடடையும்.
4475.
நீங்கிலா மறையு மணங்குறு மிசுலா
நெறியுந்தொல் லிறையவ னிடத்தில்
வாங்கினங் கிடையாப்
பதவியு மடைந்தேம்
வரத்தினா
லுயர்ந்ததூ தென்ன
வோங்கிய திருப்பேர்
நீவிரெம் மிடத்தி
லுறையவும்
பெற்றன மினிமேற்
றீங்குறுங் காபிர்
வயின்சிறி தெளியேங்
கொடுப்பது
முடைத்தருந் திறலோய்.
37
(இ-ள்)
அன்றியும், அருமையான வலிமையையுடைய நபிகட் பெருமானே!
நாங்கள் மாறாத புறுக்கானுல் அலீமென்னும் வேதத்தையும்
அழகு பொருந்திய தீனுல் இஸ்லாமென்னும்
மெய்ம்மார்க்கத்தையும், பழமையான இறைவனாகிய அல்லா
ஜல்லஜலாலகுவத்த ஆலாவின் பாலிருந்து வாங்கினோம்.
கிடைத்ததற் கருமையான பதவியையுங் கிடைக்கப்
பெற்றோம். வரத்தினாலோங்கிய றசூலென்று
மேன்மைப்பட்ட தெய்வீகந்தங்கிய நாமத்தை யுடைய
நீங்கள் எங்கள் பாலிருக்கவும் பெற்றோம். இனிமேல்
எளியேங்களாகிய யாங்கள் தீமை மிகுந்த அந்தக்
காபிர்களிடத்துக் கொடுப்பதுங் கொஞ்சமுள்ளது.
4476. ஏதெனி
லுருவொன் றியற்றியே வெறிதீ
மானினை
யிகழ்ந்தவ ருடலிற்
கோதுசெய் நெடிய
வேலினில் வாளிற்
கோலினிற் கொடுத்திட லன்றி
வேதனைப் படமற்
றொன்றினி தீயேம்
விளிகிலா
வரத்தினை யுடையீ
ராதிதன் கிருபை யாணைநும்
மாணை
யென்றுரைத் தருளின ரன்றே.
38
(இ-ள்)
கெடாத வரத்தையுடைய நபிகட் பெருமானே! அது யாது? என்று
கேட்டால் ஓர் வடிவத்தைச் செய்து ஈமானை வறிதாக
யிகழ்ந்தவர்களான அந்தக் காபிர்களது தேகத்திற்
களங்கத்தைச்
|